தீப ஒளியில்

  • தீப ஒளித் திருநாள் வந்தது
  • திரு உந்தன் அருளைத் தந்தது
  • தீப ஒளி வரிசை போல் உனதருள்தனைப் பரிசாய்த் தந்தது
  • உன் கருணைதான் வரிசையாய் நெஞ்சில் நிறைந்தது
  • உன் அன்பு மதம் இனம் மொழியாலுலகில் இணைந்தது
  • உன் பதம் தொழுது பாங்காய்ப் பணிந்தது
  • உனை நிதம் நினைந் துன்பதம் பற்றியது
  • உன் சத்யம், சிவம், சுந்தரம், அஷ்டோத்திரம், சாயி காயத்திரி
  • சகஸ்ர நாம, மனைத்துமே படித்தது
  • பஜன்கள் பாடியது நாமஸ்மரணை, நாமாவளிகள் பாடி
  • நகர சங்கீர்த்தனம் செய்தது
  • பர்த்தி யாத்திரை சென்றது வாழ்வியலில்
  • இயன்ற சேவைகளைச் செய்து வருகிறது
  • மலர்கிறது சுவாமி உன் கீதை வழி நடக்கிறது
  • சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையில் நிலைத்தது
  • உன் சத்சங்கங்கள் நீடித்தது உன் சரிதம் சரித்திர மயமானது
  • “நான் இருக்க பயமேன்’ எனும்
  • உன் மந்திரச்சொல் மகிமையாய்க் காக்கின்றது
  • மாதா, பிதா, குரு. தெய்வச் சகாவாய் நீ உள்ளில் உரைவது
  • உணர்ந்து உணரவைக்கிறது
  • குறையொன்றுமில்லை மறைமூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி நாதனே
  • உன் கமல மலர்ப் பாதங்களுக்கு
  • ஆத்மார்த்த வந்தனங்கள் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0