எல்லாம் அழகு

  • நந்தவனப் பொய்கையில் புதுப்பூவாய் மலர்ந்திருக்கும்
  • கமலத்திலுன் முகமலரில் நீ சிந்தும் புன்னகை அழகு
  • நொந்த மனதினிலுன் கருணையால் சொந்தனாய்
  • நீ கிட்டியதும் அழகுதான்
  • பந்தமாகியுன் பதந்தொழுது பணித்தவர்க் குன்பாந்தம்
  • பரிசாய் வந்தது அழகுதான்
  • நிந்தித்தாரையும் உனைச்சந்திக்கச் செய்யுமுந்தன் சங்கல்பம்
  • பாக்கியம் தருவது அழகுதான்
  • வல்வினைகள் வராது தடுத்தாட்கொள்வது அழகு
  • சொல்லுமுன் ‘நானிருக்கப்பயமேன்’ எனும் சொல்
  • வார்த்தை அழகுதான்
  • சித்திரைச் செவ்வானத்தில் சாயி மேகங்கள் நகர்வதழகு
  • மழை பொழிவித் துயிர்களுக்களிக்கும் கருணையுமழகுதான்
  • சீரடியில் சீரடி வைத்துச் சிவமாகிப் பர்த்தியிலவதரித்து
  • சிவசக்தியுமாய்ச் சீலமளித்தது அழகு
  • ஓரடி பக்தர் நடக்கத் தேடி நாடி வந்து
  • அபயமளிப்பதும் அழகுதான்
  • பாதைகள் பலவாயினும் சேருமிடம் சுகமாவதழகு
  • உன் கீதைப்பாதையாய் வழிநடத்தலே அழகுதான் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0