ஆதார சக்தி
- விழிமூடித் தரிசிக்க உன் முகமலர்
- அகத் தவத்தினி லழகாய்த் தெரியும்
- வழியெங்கு நடந்தாலு மதிலுன் துணை இணையாக வரும்
- வளியிலுன் வியாபகமும் வெளியிலுன் னருட்கருணையும்
- பரந்து விரிந்து பரவசமளிக்கும்
- ஒளியிலுன் னன்பு ஒளிறும், காற்றிலுன் சுகந்தம் வீசும்
- மழையிலுன் பிரேமை பொழிந்து வர்ஷிக்கும்
- நெருப்பிலுன் வெம்மையுன் சத்தியப் பாதையை உணர்த்தும்
- நிலத்திலுன் ஆதார சக்திதா னங்கம்வகிக்கு மெங்கு மெதிலும்
- சேதாரமின்றிக் காக்கும்
- பஞ்சபூதத்திலும் ஆட்சிசெய்து அரங்கேற்றுகிறாய் சுவாமி
- நெஞ்சமெல்லாம் நிறைந்து குறையின்றி வாழ்வியல்
- வாழ வைக்கிறாய்
- தஞ்சமென்று வருவோர்க்குக் கொஞ்சமும் மீந்திடாத
- கருணை செய்கின்றாய்
- பஞ்சமெதுவும் வந்திடாமல் கண் துஞ்சாமல் யோக நித்திரையில்
- முத்திரையாய்க் காத்தருள்கின்றாய் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: