அனில் குமார்: சுவாமி! நாம் ஏன் இறையருளைப் பெறுவதில்லை?
பகவான்: அப்படி எண்ணுவது தவறு. அப்படி நீ நினைத்தால் அது தவறு. எல்லோருக்கும் கிடைக்கும்படிச் சமமாகவே இறையருள் இருக்கிறது. ஜாதி, மதம், பால், தேசம் என்கின்ற வித்தியாசங்களை அவர் பார்ப்பதில்லை. குறைபாடு உன்னில்தான் இருக்கிறது என்பதை நீ அறியவேண்டும். உன் இதயமென்னும் தம்ளரை நீ சுத்தப்படுத்த வேண்டும். உதாரணமாக, இப்போது பலத்த மழை பெய்கிறது. ஒரு பாத்திரத்தில் நீரைச் சேகரிக்க விரும்பினால் அதை நீ வாய்ப்பகுதி மேலே இருக்கும்படி வைக்கிறாய். அதைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தால் நீரைச் சேகரிக்க முடியுமா? அப்போது எத்தனை மழை கொட்டினாலும் பயனில்லை. எனவே, நாம் எப்போதும் நமது இதயங்களைத் தூய்மையாக, கருணை மழையை வாங்கத் தயார்நிலையில் வைக்கவேண்டும். நாம் கடவுளின் அன்பைப் பெற அது வரும் திசையை நோக்கி வைக்கவேண்டும், அல்லவா?
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு