விநாயகர் – அனைவருக்கும் தலைவர்

ஒரு சந்தர்ப்பத்தில், சிவ கணங்களுக்குரியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் கலந்து கொள்வோர், உலகை ஒருமுறை வேகமாகச் சுற்றி வந்து சிவபெருமானின் பாதங்களை அடைய வேண்டும். அவரவர்க்குரிய வாகனங்களில் கடவுள்கள் புறப்பட ஆரம்பித்தனர். சிவனின் மூத்த மகனான விநாயகரும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். அவருடைய தலையோ யானைத்தலை. வாகனமோ எலி. அதனால் வேகமாகப் பயணம் செய்ய இயலவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு நாரதர் அவர் முன் தோன்றி, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். அந்த வினா விநாயகரின் கோபத்தைக் கிளறி விட்டது. அதனால் அவர் மிகுந்த சீற்றம் அடைந்து விட்டார். அதற்குக் காரணம், பயணம் போகிறவர்கள் வழியில் சந்திக்கும் மனிதன் ஒற்றை பிராமணனாக இருப்பின் அது அமங்கலமாகும். எனவே, மேற்படி நிகழ்ச்சி ஒரு தீய சகுணமாகும். அது பயணத்திற்கு இரு மடங்கு தடையை உண்டாக்குவதாகும். நாரதர் (பிரம்மாவின் மகன் நாரதர்) தலை சிறந்த பிராமணனாக இருந்தும் தீய சகுணமாகக் கருத்தப்பட்டார். ஒரு இடத்திற்குச் செல்லும்போது யாராவது உங்களை “எங்கே போகிறீர்கள்” என்று கேட்பது தீய சகுணமாகும். நாரதர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.

இருப்பினும் விநாயகருடைய சினத்தைத் தணிக்கும் ஆற்றலும் நாரதரிடம் இருந்தது. விநாயகருக்குள்ள இடர்பாட்டையும், வெற்றி பெற வேண்டும் என்னும் அவரது ஆவலையும் நாரதர் தெரிந்து கொண்டார். மனம் தளர்ந்து விடாமல் இருக்கும் வண்ணம் ஊக்கப்படுத்தி, ஆறுதல் கூறினார். பின்வருமாறு அறிவுரையும் பகன்றார். “ராம நாமமாகிய விதையிலிருந்து தான் பிரபஞ்சம் என்னும் விருட்சம் வளர்ந்திருக்கிறது. எனவே அவருடைய நாமத்தைத் தரையில் எழுதி அதை ஒரு முறை சுற்றி விட்டு சிவனிடம் விரைந்து பரிசைக் கோருவாயாக” என்றார். விநாயகரும் அப்படியே செய்து தந்தையை அடைந்தார். எப்படி இவ்வளவு சீக்கிரம் திரும்பினாய் என்று கேட்ட தந்தைக்கு, நாரதர் கூறிய அறிவுரையை எடுத்துச் சொன்னார் அவர். நாரதரின் உன்னதமான அறிவுரையை சிவன் பாராட்டினார்; பரிசு மகனுக்கு அளிக்கப்பட்டது. அன்று முதல் கணங்களுக்கு உரிய (கண+ பதி) அதிபதியாக நியமிக்கப்பட்டு விநாயகர் அனைவருக்கும் தலைவர் ஆனார்.

பட விளக்கம் :
செல்வி.சாயினி,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0