ஸ்ரீ சத்யசாயி தெய்வம் (பாபாவின் 95-வது பிறந்தநாளில்)
- சுவாமியுன தகவைத் திருநாளென்றுமே உவகை,
- உவப்பு வியப்பே, மகிழ்வு, மகிழ்ச்சிதானே !
- சாயி நாமம் ஒன்றே போதும் சங்கடங்கள் தீர்ந்திடும்
- தாயுமாகிநின்று நமது சந்ததிகள் காத்திடும்
- மாயி மகமாயியாக மங்கலங்கள் தந்திடும்
- நம் மாயை போக்க மாயனாக மகிமைகளைச் செய்திடும்
- ‘நானிருக்கப் பயமே’னென்று நா மணக்கச் சொல்லிடும்
- சாயின் ‘நான்’ இருக்கக்கூடாதென்றே நாம் நடந்து காட்டினால்
- தானிருப்பதை யுணர்த்தித் தானாய் வரமளித்திடும்
- கானாமிர்த வேதாமிர்தமாய் தேனாமிருதசாயி
- கருணை தேடி வந்து காத்திடும்
- பர்த்தியில் தானவதாரம் பார்தனிலே புகழாரம்
- பார்த்திபனின் பதமலர்தான் புவிதனிலே ஆதாரம்
- பரந்தாமன் கண்மலரில் கருணைமட்டும் நிரந்தரம்
- சேதாரமில்லையெனச் சேர்ந்தே களித்திடுமிது சத்தியம்
- மாதா ஆயிரம் சேர்ந்தாலு மீடில்லை சாயன்னைக்குத்
- தாமாய்த் தேடி வந்து செய்யுங் கருணைதா னென்றைக்கும்
- இறங்கி, இரங்கி, வந்தே காத்தருளும் அன்பு
- அடைக்கலத் தெய்வம்
- ஊண், உறக்கத்திலும், உயிராய் உணர்வில் வந்து
- நேசித்திடும் நேயம்
- சத்யசாயிநாத னன்பின், சத்திய மென்றுமே சாத்தியம்
- நல்லனமட்டுமே நயமாய், நியாயமாய் நிறைவேற்றிடும்
- நித்தியம்
- அல்லன செய்தோர்க்கு, மன்புடனானகரிசனம்
- பின்னெப்போது மவரகந்தனில், நீங்கமாட்டாரதுவே
- சாயின் சங்கல்பம். கோடானு கோடி
- பக்தர்களுணர்ந்தனரவை களெண்ணிலடங்கா
- அத்துனையன்பர்க்கும் பயக்கரமதிலாசி
- யுந்தந்திட்ட தத்துவம்தானே
- அன்புக்கருணையாம்சாயிதெய்வம்
- இத்துனைதானென் றியம் பிட வியலாதிவ்வுலகில்
- நற்றுணையாற்றி வருமற்புதங்கள், வியாபக விந்தைகளே
- விந்தைகளே
- உலகசாயி பக்தர்களுள மகிழ்ந்து, மனம் நிறைந்து
- மகிழும் நாளிந்நாள்
- திலகமாம் சத்யசாயினுலகம் தானே பிரசாந்தித் தலம்.