மாயா ஜாலம்
கண்ணன் ஒரு சமயம் இந்தப் பக்கமும், மறு சமயம் வேறு பக்கமும், சில சமயம் எல்லா பக்கமும் தோற்றமளித்ததைக் கண்ட கம்சன், “ஏ, அற்பனே! உன்னுடைய மந்திர தந்திரங்களையெல்லாம் நிறுத்தி வை” என்று வசை பாடினான். அத்துடன் நிறுத்தாமல் அவன், “எனது தினவெடுத்த தோள்களுடன் உனது மாயா ஜாலங்களை மோதவிட்டால், சமுத்திரத்துடன் நீர்த்துளி ஒன்று மோதுவதற்கு ஒப்பாகும்” என்றும் கூறினான்.
அப்போது கண்ணன் (ஏழு வயது இளைஞனாக இருந்தபோது) வலிமையுடன் அவன்மீது மோதி, தரையில் வீழ்த்தி, மார்பில் அமர்ந்து, சாகக்கூடிய வகையில் அவன் கழுத்தை நெறித்த போது, கம்சன் “ஓ! ஓ! நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பரிதாபமாக அழுதான். அப்போது கண்ணன் “மாமா, இதுவும் மாயா ஜாலம் தான். மாயா ஜாலத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று பதிலளித்தான்.