சாயி பிரபாவம்
- புத்தம் புது மலர் பறித்து அதில் நித்தம்
- நித்தமுனை நினைத்தே துதித்துச் சத்ய தர்மம் சாந்தி
- பிரேமை அகிம்சையில் நிலைத் துன்நாமஸ்மரணையின்
- பெயர்களை, செபித்துன், புனித நாமாவளிகளில்
- மனம் லயித் துன்னெழிலுருவ வழிபாடுகளில் திளைத்து
- இதயமாம் கோவிலிலுனைத் தொழுதுனது ஒரே மதம் மொழி
- இனமாம் சனாதன தர்மத்தில் மனமொன்றி உன்
- அமுதமொழிகளில் மனமகிழ்ந்து
- ஆயிரம் தாயன்புக் கருணையில் நனைந்திப் பிறவி
- முழுவதும் உன்னைத் தொடர்ந்து வர நீயும் தொடர்ந்தே
- உடன் வர, உன் சாந்நித்திய சங்கல்பமருள வேண்டும்
- கோடி சூரியப் பிரகாசமே சாயி உன் கருணை
- கோடியக்ஞப்பிரபாவம் சாயி நீ அருணை
- கோடி தவப்பிரயாகமே சாயி நீ பொருணை
- கோடி மகிமைப்பிரதாபனுன் அன்பே திரிவேணி
- சங்கமப் பிரயாகை
- உன் மலரடி பணிகின்றோம் உனக்கு ஆத்மார்த்த வந்தனம்
- சுவாமி சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்