ஸ்ரீ சாயி சாரதையாய்

  • கலையரசி வருவாயே ஆயகலை களெல்லாங்கற்க
  • அருள் புரிவாயே
  • மலையரசி உடனிருக்க நல்மகிமைகள் பல தருவாயே
  • அலையரசியருகில் நிற்க அன்பு தந்தருள் பாலிப்பாயே
  • கல்விக்கரசி ஆய கலைகளுக்கரசியாம்
  • நீ கவித்துவமளிப்பாயே
  • கலைமகளெனப் பெயர்தாங்கிக் கல்விக்
  • கடாட்சமளிப்பவளே
  • நாமகள் நாமமுடன் நற்சொல்லில் இனிமை தருபவளே
  • வாக்தேவியாய் வாழ்வியலில் வாக்கில் வலம் வரும்
  • வடிவழகானவளே
  • ஸ்ரீ சரஸ்வதி யாய்ச் சகலகலைகளுமருளும்
  • ஸ்ரீ சாரதைத் தாயானவளே
  • வீணையினைக் கையிலேந்தி வீணா கானமிசைத்து
  • மகிழ்பவளே
  • வினையகற்றி வாழ்வில் வளங்கள் பலவும் சேர்ப்பவளே
  • வெண்தாமரையில் மாணிக்கவல்லி நாயகியாய்
  • அம்சவேணியாய் வீற்றிருப்பவளே
  • ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதியாயிக் கொலு நாளில்
  • வந்திருந்து நல்லாசி தருபவளே
  • பர்த்தி ஸ்ரீ சத்யசாயி சரஸ்வதி உனக்குச்
  • சாஷ்டாங்க நமஸ்காரம், சாசுவத மாயலங்காரம்
  • சாமுத்திரிகாவாய்ச் சிருங்காரம், அருள்புரிய நீ வரவேண்டும்
  • உன் அன்புக் கருணை தரவேண்டும்
  • ஸ்ரீ சாயி சரஸ்வதிமா சரணம் சரணம்
  • போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0