ஸ்ரீ சாயி சாரதையாய்
- கலையரசி வருவாயே ஆயகலை களெல்லாங்கற்க
- அருள் புரிவாயே
- மலையரசி உடனிருக்க நல்மகிமைகள் பல தருவாயே
- அலையரசியருகில் நிற்க அன்பு தந்தருள் பாலிப்பாயே
- கல்விக்கரசி ஆய கலைகளுக்கரசியாம்
- நீ கவித்துவமளிப்பாயே
- கலைமகளெனப் பெயர்தாங்கிக் கல்விக்
- கடாட்சமளிப்பவளே
- நாமகள் நாமமுடன் நற்சொல்லில் இனிமை தருபவளே
- வாக்தேவியாய் வாழ்வியலில் வாக்கில் வலம் வரும்
- வடிவழகானவளே
- ஸ்ரீ சரஸ்வதி யாய்ச் சகலகலைகளுமருளும்
- ஸ்ரீ சாரதைத் தாயானவளே
- வீணையினைக் கையிலேந்தி வீணா கானமிசைத்து
- மகிழ்பவளே
- வினையகற்றி வாழ்வில் வளங்கள் பலவும் சேர்ப்பவளே
- வெண்தாமரையில் மாணிக்கவல்லி நாயகியாய்
- அம்சவேணியாய் வீற்றிருப்பவளே
- ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதியாயிக் கொலு நாளில்
- வந்திருந்து நல்லாசி தருபவளே
- பர்த்தி ஸ்ரீ சத்யசாயி சரஸ்வதி உனக்குச்
- சாஷ்டாங்க நமஸ்காரம், சாசுவத மாயலங்காரம்
- சாமுத்திரிகாவாய்ச் சிருங்காரம், அருள்புரிய நீ வரவேண்டும்
- உன் அன்புக் கருணை தரவேண்டும்
- ஸ்ரீ சாயி சரஸ்வதிமா சரணம் சரணம்
- போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்