பாரதமே குருவாக வேண்டும்
- தித்திக்கும் பல்சுவைகளில் மாற்றம் உண்டு
- எத்திக்கும் உன் அன்புக்கருணைதன்னில்
- மாற்றமில்லை, ஏற்றம் மட்டுமே
- பன்திக்குமுன் னருட்கருணைக் கடாட்சத்தால்
- உலகினனைத்துத் திக்கும்தான் புனித
- பாரதத்தி லவதரித்த, உன் புகழ் சிறக்கும்
- பன்மதப் பக்தருன் பதமலர்தேடி ஓடிப் பாடி நாடி வருவதுபோல்
- பன்மத மொழிகள் இனங்கள் கலாச்சாரங்களிருப்பினும்
- உன் மதம் இனம் மொழியாம்
- அன்பு மதமென்றொன்றானதுபோல்
- நம் தேச பக்தியும் ஒற்றுமையும் ஓங்கிட என்றுமே
- நீ துணையிருக்க உனது சங்கல்பம் வேண்டும்
- பிரசாதமாம் புனிதப் பிரகாந்தியாம் பிரசாந்தியின்
- கருவறைத் தெய்வமுன் கருணைதான்
- அன்னையின் கருவறைக் கருவையும் காத்து ரட்சிக்குமே
- சுபிட்சமாய் நீ வந்து அன்பும் அமைதியும் சனாதன
- ஆன்மீக தர்மமும் தழைத்தோங்கிடவே
- சுசீந்திர தானுமாலயனாய் வந்து மாட்சிமை தந்திடுவாய்
- அட்சயமாயிருந்து அட்சதைதூவி அகிலத்தைக் காத்திடுவாய்
- தேசமும் தேசபக்தியும் இரு கண்கள்போல் இந்தியா
- மனித சமுதாயத்தின் குரு என்பாய்
- உன் பவித்திர சேவைகளாற்றிட உடல் உள்ள மன ஆத்ம
- பலம் தந்து இந்து கலாச்சாரமே
- உலகின் கலாச்சாரமாய் விளங்கிடவே
- சகிப்புத்தன்மை சத்யம் தர்ம சாந்தி பிரேமை
- அகிம்சை எனும் சாதனை தந்து மனிதம்
- அன்பில் வாழச் சாட்சியாய்
- நீ துணையிருப்பாய் சுவாமி. சரணாகதி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்