பாரதமே குருவாக வேண்டும்

  • தித்திக்கும் பல்சுவைகளில் மாற்றம் உண்டு
  • எத்திக்கும் உன் அன்புக்கருணைதன்னில்
  • மாற்றமில்லை, ஏற்றம் மட்டுமே
  • பன்திக்குமுன் னருட்கருணைக் கடாட்சத்தால்
  • உலகினனைத்துத் திக்கும்தான் புனித
  • பாரதத்தி லவதரித்த, உன் புகழ் சிறக்கும்
  • பன்மதப் பக்தருன் பதமலர்தேடி ஓடிப் பாடி நாடி வருவதுபோல்
  • பன்மத மொழிகள் இனங்கள் கலாச்சாரங்களிருப்பினும்
  • உன் மதம் இனம் மொழியாம்
  • அன்பு மதமென்றொன்றானதுபோல்
  • நம் தேச பக்தியும் ஒற்றுமையும் ஓங்கிட என்றுமே
  • நீ துணையிருக்க உனது சங்கல்பம் வேண்டும்
  • பிரசாதமாம் புனிதப் பிரகாந்தியாம் பிரசாந்தியின்
  • கருவறைத் தெய்வமுன் கருணைதான்
  • அன்னையின் கருவறைக் கருவையும் காத்து ரட்சிக்குமே
  • சுபிட்சமாய் நீ வந்து அன்பும் அமைதியும் சனாதன
  • ஆன்மீக தர்மமும் தழைத்தோங்கிடவே
  • சுசீந்திர தானுமாலயனாய் வந்து மாட்சிமை தந்திடுவாய்
  • அட்சயமாயிருந்து அட்சதைதூவி அகிலத்தைக் காத்திடுவாய்
  • தேசமும் தேசபக்தியும் இரு கண்கள்போல் இந்தியா
  • மனித சமுதாயத்தின் குரு என்பாய்
  • உன் பவித்திர சேவைகளாற்றிட உடல் உள்ள மன ஆத்ம
  • பலம் தந்து இந்து கலாச்சாரமே
  • உலகின் கலாச்சாரமாய் விளங்கிடவே
  • சகிப்புத்தன்மை சத்யம் தர்ம சாந்தி பிரேமை
  • அகிம்சை எனும் சாதனை தந்து மனிதம்
  • அன்பில் வாழச் சாட்சியாய்
  • நீ துணையிருப்பாய் சுவாமி. சரணாகதி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0