அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் நமாஸ் செய்கிறார்கள், ஞாயிறுதோறும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போகிறார்கள். அப்படியிருக்க ஹிந்துக்கள் ஏன் மற்ற மதத்தினரைப் போலக் கோவிலில் சந்தித்துக்கொள்வதில்லை?
பகவான்: ஹிந்துக்கள் அப்படிக் கூடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மற்றவர்களைப் போல அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திக்கவேண்டியதில்லை. ஏன்? ஹிந்துவின் வீட்டில் பூஜையறை என்று ஒன்று வழிபாட்டுக்காகவே இருக்கிறது. அவன் அங்கே தினமும் பிரார்த்திக்கிறான். எனவே அவன் கூட்டுப் பிரார்த்தனைக்காக அல்லது குறிப்பிட்ட நாளில் பிரார்த்தனைக்கு என்று மற்ற மதத்தினர் போல ஒன்றுசேர வேண்டியதில்லை.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு