இளையான்குடிமாற நாயனார்

இளையான்குடி எனும் ஊரில் மாறனார் என்ற வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். இவர் சிவனடியார் எவராயினும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை வரவேற்று வழிபட்டு உபசரித்து விருந்து பரிமாறி அனுப்புவது வழக்கம். இறைவன் அருளால் பெருஞ் செல்வராக இருந்தமையால் இந்தத் திருத்தொண்டு நல்லோர் போற்றும்படி இடையறாது நிகழ்ந்து வந்தது. இவரது பக்தியை உலகுக்குணர்த்த எண்ணிய சிவபெருமான், அவரை வறுமையடையும்படி செய்தார்.

இளையான்குடியாரிடம் மழை பெய்யும் நள்ளிரவில் இறைவன் சிவனடியார் போல் வேடமிட்டு பசியென்று வந்தார். வறுமையில் வாடிய நாயனார், பகலில் விதைத்த நெல்லை எடுத்து மனைவியிடம் கொடுக்க மனைவியோ நெல்லை குத்தி அரிசியாக்கி வீட்டுக் கூரையிலுள்ள வரிச்சுக் கொம்புகளை முறித்து விறகாகப் பயன்படுத்தி, கொல்லைப்புற காய்களைப் பறித்து உணவு தயார் செய்தார்.

அதுவரை படுத்துத் தூங்கிய அடியாரை உணவுண்ண அழைக்க, சிவனடியார் எழும்போது சிவபெருமானாகத் தோன்றி, தம்பதிகளுக்கு காட்சி தந்து அருளினார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0