ஈசுவரம்மா எங்கள் தாயே!

  • பல்லவி
  • ஈசுவரம்மா எங்கள் தாயே!
  • சாயி
  • ஈசுவரனைத் தந்தாயே நீயே!
  • சரணங்கள்
  • கோசலை ராமனைப்பெற்றாள்
  • -நல்ல
  • கோதண்டம் ஏந்திடும்
  • தெய்வத்தைப் பெற்றாள்!
  • ஈசுவரம்மா எங்கள் அன்னாய்!
  • -நீ
  • இகபரம் காக்கின்ற
  • தெய்வத்தைப் பெற்றாய்!
  • (ஈசுவரம்மா)
  • தேவகியும் கண்ணனைப்
  • பெற்றாள்-இங்கு
  • திசையெலாம் குழலூதும்
  • தெய்வத்தைப் பெற்றாள்!
  • ஈசுவரம்மா எங்கள் அன்னாய்!
  • -நீ
  • ஈசுவரனை அல்லவோ
  • ‘சத்யமாய்’ப் பெற்றாய்!
  • (ஈசுவரம்மா)
  • சாயியை நீபெற்ற தாலே
  • -இங்கு
  • சகலமும் வாழ்விலே
  • பெற்றோமே யாமே!
  • ஆயிரம் தாயான தாயை
  • -உந்தன்
  • சேயாகப் பெற்றாயே
  • அம்மவோ அம்மா!
  • (ஈசுவரம்மா)
  • மூ’வரம்’ சாயியிடம் கேட்டாய்
  • -இங்கு
  • மேவிடும் சேவைக்கு
  • விதைகளைப் போட்டாய்!
  • தெய்வமே ‘தேர்ந்திட்ட தாய்நீ’
  • -எங்கள்
  • தெய்வத்தின் தெய்வமே
  • வாழ்க நீ வாழ்க!
  • (ஈசுவரம்மா)
  • சென்னை சுந்தரம்
  • திருக்கோயிலில்
  • பகவானுக்குச்
  • சமர்ப்பணமான பாடல்
  • என்றும் சாயிசேவையில்
  • பொன்மணி
  • ஜெய் சாயிராம்!
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0