நவராத்திரி நாயகியாய்
- பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச்
- சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை
- கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய்,
- உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத்
- தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக,
- சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி
- நலம் தரும் வல்லமையுள்ள சாயி
- பலப்ரத மணித்தாயாய் வானத்தில் கலந்து நின்றனைத்துப்
- பொருட்களையும் தன்பாலே ஏற்றுத் தன்னுடன்
- கலந்து நிற்க அருளும் வல்லமை கொண்ட சாயி
- கலவிகரணி மாதாவாய்,
- சந்திரனில் கலந்து நின்று அமுதத்தைத் தாவர உயிர்களுக்குப்
- பொழிந்த கூட்டத்தில் நன்மை செய்யும் வல்லமை
- படைத்த சாயி பலவிகரணி அன்னையாய் காற்றில்
- கலந்து நின்றுயயிர்களுக்குப் பிராண வாயுவை
- அளித்து நன்மைதரும் வல்லமை படைத்த
- சாயி காளித் தாயாராய்
- நெருப்பில் நின்று வெம்மையை வழங்கி யாவற்றையும்
- அழிக்கும் வல்லமை கொண்ட சாயி ரௌத்திரித்தாயாய்,
– தமிழரசி பாலசுப்பிரமணியம்