வெளி வளியில்
- பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும்
- பரவிப் பரவசப்படுத்தும்
- மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன்
- வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும்
- யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி
- லானந்தித்து ஆராதனைதான் புரிவரே
- மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா
- நந்த முகுந்தா என்றே ஆயிரமாயிரம்
- நாமங்களி லழைத்தால் தானாய்த் தானே
- வந்தருளியே பரமானந்தமடையும் நந்தகோப
- கோகுலகிருஷ்ண னுனைக் கண்டு
- மகிழாதார்தான் யார் ?
- கோவர்த்தன கிரிதாரியாய்க் கோக் கூட்டம் காத்திட்ட
- ஆராவமுதனுன் வேணுகானம் கேட்டு
- ஈரேழுலகமும் ஆனந்தக்கூத்தாடி மகிழுமே
- யமுனா தீரனாய் ராதையின் கண்ணனுன்ராசக்
- கீரீடையை ரசிக்காத உள்ளமேது
- ராதே கிருஷ்ணா இவ்வுலகில் ?
- மயிற்பீலி அசைந்தாட மதுர மோகன கானம் இசைத்திடும்
- ஸ்ரீ சத்யசாயிகிருஷ்ணா உன் பரம
- பாதார விந்தங்களுக்குக் கோடி கோடி
- வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்