பேசாமல் பேசிக்கிடப்பதுவும் எக்காலம்?

  • ஐம்புலனை அடக்கி
  • ஐங்கரனைத் தெண்டனிட்டு
  • ஐம்பொன்னை அடைந்து
  • அருள்பெறுவது எக்காலம்?
  • ஓயாமல் அழுது
  • உள்ளுடைந்து போகாமல்
  • மாயன் அருள்பெற்று
  • மகிழ்ந்திருப்பது எக்காலம்?
  • அவக்கடலில் மூழ்கி
  • ஆவிபறி போகாமல்
  • சிவசக்தி ரூபனிடம்
  • சேர்ந்திருப்ப தெக்காலம்?
  • பிரசாந்தி நிலையத்தில்
  • பேரின்பத் தேனருந்தி
  • பரசாந்தி கொண்டு
  • வாழ்ந்திடுதல் எக்காலம்?
  • மையல் கொண்டந்த
  • மாதவனின் திருவடியில்
  • பையப் பரமபதம்
  • அடைந்திடுவது எக்காலம்?
  • பந்தம் அறுத்தெறிந்து
  • பரமன்தனை மட்டும்
  • சொந்தங் கொண்டாடும்
  • நிலைவருவது எக்காலம்?
  • ஆடம்பரமும் பகட்டும்
  • அழிகின்ற சுகமும்
  • வேடமென்று நீக்கி
  • வெளியேறல் எக்காலம்?
  • தித்திக்கும் அமுதத்தை
  • சிவஞான சத்யத்தை
  • முத்திதரும் மூலவனை
  • நினைந்திடுவது எக்காலம்?
  • சிவானந்தத் தேன்பொழியும்
  • பர்த்தீசன் பாதத்தில்
  • தவானந்தங் கொண்டு
  • தனித்திருப்ப தெக்காலம்?
  • ஆசாபாச மெலாம்
  • அடங்கி ஈசனிடம்
  • பேசாமல் பேசிக்
  • கிடப்பதுவும் எக்காலம்?
  • இதயத் தாமரையை
  • ஈசனுக்குச் சூட்டி
  • உதயத்தைக் கண்டு
  • ஒடுங்குவதும் எக்காலம்?
  • ஆனந்த மூர்த்தியின்
  • அவதார மகிமையினை
  • ஆனந்தமாய் நுகர்ந்து
  • அடங்குவது எக்காலம்?
  • தேனுகர்ந்த வண்டாய்
  • தியானசிவன் சந்நிதியில்
  • நானுகர்ந்து சுற்றி
  • நலம்பெறுதல் எக்காலம்?
  • பர்த்திபுரி நாதன்
  • பார்வையிலே மூழ்கி
  • பதமலரில் கிடந்து
  • முக்திபெறல் எக்காலம்?
  • கல்பதரு வின்கீழ்
  • கண்மூடித் தியானித்து
  • கஞ்சமலர்ப் பாதத்தை
  • யாசித்தல் எக்காலம்?
  • அஞ்ஞான மோகத்தை
  • அடியோடு விட்டொழித்து
  • மெய்ஞ்ஞான சத்தியத்தில்
  • மேன்மையுறல் எக்காலம்?
  • ஆத்ம யாகத்தை
  • அனவரதம் புரிவதற்கு
  • தேகம் கருவியென்று
  • தெளிந்திடுதல் எக்காலம்?
  • ஆத்ம ஞானத்தை
  • தேடித் திசையறிந்து
  • ஆத்ம ராமனிடம்
  • அடங்குவது எக்காலம்?
  • முனிவாதி முனிவர்களும்
  • தேடிக் களைத்திட்ட
  • முழுமுதலை அடிதொழுது
  • முக்திபெறல் எக்காலம்?
  • ஆரண்யம் தாண்டி
  • அகழிபல தாண்டி
  • காருண்ய ஞானத்தைக்
  • கண்டிடுதல் எக்காலம்?
  • பழைய வாசனையை
  • அடியோடு விட்டொழித்து
  • பர்த்தி வாசனையில்
  • தோய்ந்திடுதல் எக்காலம்?
  • பர்த்தீசன் கோயிலை
  • பன்னாளும் சுற்றிவந்து
  • பரமபத வாயிலை
  • அடைந்திடுவ தெக்காலம்?
  • சங்கல்பம் ஏதுமின்றி
  • சங்கரனை தியானித்து
  • சத்யஞானம் பெற்று
  • ஒடுங்குவது எக்காலம்?
  • எண்ணம் அழிந்து
  • ஏதுமற்ற கூடாகிக்
  • கண்ணன் திருவடியில்
  • கலந்திடுதல் எக்காலம்?
  • சும்மா இருப்பதே
  • சுகமென்று சுந்தரத்து
  • எம்மானின் சோதியிலே
  • கலந்திடுதல் எக்காலம்?
  • மௌனத்தில் தோய்ந்து
  • மாதவனின் தீங்குரலை
  • மனவெளியில் கேட்டு
  • மயங்குவது எக்காலம்?
  • உள்ளம் அழிந்து
  • உத்தமனின் திருமுகத்தை
  • உள்ளிருந்து பார்த்து
  • உருகியழல் எக்காலம்?
  • சித்தத்தில் ஊறிப்
  • பொங்கும் சிவத்தேனில்
  • நித்தமும் மூழ்கி
  • நினைப்பொழிதல் எக்காலம்?
  • எல்லாம் அவனென்று
  • பரஞானம் அடைந்து
  • எல்லாமாய் ஆனவனில்
  • அடங்குவது எக்காலம்?
  • சத்வகுண மூர்த்தி
  • சந்நிதியில் கிடந்தழுது
  • சத்யசிவ சுந்தரத்தில்
  • அடங்குவது எக்காலம்?
  • (நன்றி: பத்திரகிரியார்-
  • சித்தர்பாட்டு வடிவம்)
  • -ஶ்ரீ சத்யசாயி கவிதைகள்
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0