முத்து விதானத்தில்

  • வித்தகனே வியாபகமே விரும்பியுனை ஏற்கும்
  • பக்தர்களின் நித்திலமே புத்தம்புதுப் புத்தகமே
  • எங்களகத் தவத்தின் ஆதவனே சாயி மாதவனே
  • நித்தம் உன் தரிசனம் கண்டு
  • நிசமாய்த்தான் ஆனந்திக்கிறோம்
  • உன்னை நித்திய தர்ம சனாதன சாரதியாய்த் தான்
  • ஆராதிக்கிறோம்
  • உனது சத்திய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையில்தான்
  • வாழ்வியலில் வாழ்கின்றோம்
  • ஸ்ரீ சத்யசாயி நாராயணனுன்னை மாதா பிதா குரு
  • தெய்வம் சகாவாய் அருளியலில் காண்கின்றோம்
  • சாயி நாராயணா உன்னை ஸ்ரீராமனாய் ஸ்ரீகிருஷ்ணனாய்
  • மும்மூர்த்திகள் முத்தேவியர்க ளாய்
  • முப்போது மெப்போதும் மறவாமல்தான் துதிக்கிறோம்
  • முத்து விதானத்தில் நவரத்தின சிம்மாசனத்தில்
  • எங்களகத்தவமதில் நற்பூசனை
  • செய்துதான் வணங்குகின்றோம்
  • சித்சத்ஆனந்தமாய்ச் சிருங்காரப்பர்த்திதனில்
  • இஷ்ட தெய்வமாயுன்னைத் தொழுகின்றோம்
  • நீ இருக்கக் குறையேதும் வருமா ?
  • உந்தன் துணையிருக்கக் கறைதான் வாழ்வில் வருமா?
  • நீ அருகிருக்கச் சம்சார சாகரக்கரைதான் மறையுமா?
  • மறையும் மற்றெல்லாமும் உற்ற துணையாயும்
  • நீயிருந்து காத்தருள்கிறாய்
  • பிறையாய் முழுநிலவாய்ச் சூரியனாய் மேக மும்மழையாய்ப்
  • பூமியும் வானமுமாய் எண்திக்கும் ஏழுலகமும்
  • பரபிரம்மமாய் விரிந்து பரந்திருக்கிறாய்
  • உனைப் புரிந்தவர்க்கு நல்விருந்தா யிருக்கிறாய்
  • உன்னை உணர்ந்தவர்க்கு நல்மருந்தா யிருக்கிறாய்
  • ஸ்ரீசத்ய சாயி நாராயணா உன் மலரடியில் சந்ததியாய்ச்
  • சொந்தமாய்ப்ப பந்த பாந்தமாய்ப் பணிகின்றோம்
  • உன் அபய கரத்தில் நல்லாசி தந்து அபயஹஸ்த மளித்து
  • வரமருளிட வர வேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0