வீழ்ச்சிக்கு வித்திட்ட தற்பெருமை:
மார்ச் 4, 1962 ல் நிகழ்த்திய சொற்பொழிவில் , சுவாமி அழகும் நகைச்சுவையும் கலந்த ஒரு கதையை விவரித்தார், அதில் இறைவன் எவ்வாறு தன் பக்தர்களை ஒருநாளும் இறுமாப்பும் வலிமையும் வாய்த்தவர்களிடத்தில் அவமானப்பட அனுமதிப்பதில்லை என்பதை விளக்கினார்.
பூரி நகரத்தை சார்ந்த சில அறிஞர்களும் பண்டிதர்களும், வங்காளத்தை சேர்ந்த ஒரு அந்நியனின் புகழ் திடீரென உயர்ந்ததில், மகிழ்ச்சி கொள்ளவில்லை . அதனால் அந்நியனான மாதவதாஸை அவர்களின் மையத்தில் அறிவுசார் விவாதத்திற்கு அழைத்தனர் . அவரோ மறைநூல்களை தன் வாழ்க்கை பயணத்தில் உதவுவதற்காகவும் நற்செயல்களில் வழிநடத்துவுதற்காகவும் கற்றாரே தவிர, மற்றவர்களை தோற்கடித்து விவாதங்களில் வெற்றி பெறும் அளவுகோலாக அல்ல. அதனால் அவர் விவாதம் தொடங்கும் முன்னரே தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்குரிய ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதை ஒப்புக்கொள்வதில் உண்மையில் எதிரணியின் முன்னணி பண்டிதருக்கு மிக்க மகிழ்ச்சியே, ஏனெனில் மாதவதாஸின் புகழ் பெற்ற புலமை அவரை அச்சுறுத்தியது.
பண்டிதர் அந்த வெற்றியின் அடையாளமான ஆவணத்துடன் காசிக்கு விரைந்தார். அங்கு அறிஞர்கள் நிறைந்த சபையில் அந்த அறிக்கையை வெளியிட்டு, அவர்கள் அனைவரும் மாதவதாசரை விட தன்னையே மேன்மையானவர் என்று மதிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் இறைவன் தனது பக்தரை அவமானப்பட விடுவதில்லை அந்த கையெழுத்திட்ட ஆவணம் திறந்து படிக்கப்பட்ட பொழுது , அங்குள்ள அனைவரும் அது மாதவதாசரே வெற்றி பெற்றதாக அறிவித்து தன் தோல்வியை பண்டிதரே ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட ஒன்றாக இருப்பதை கண்டு திகைத்துப் போயினர்,
பக்தருக்கு அவமானமும் தீங்கும் நேரும் பொழுது, பகவான் ஒருநாளும் அமைதி காப்பதில்லை.
ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 2, அத்தியாயம் 30,04/03/1962.
Help Desk Number: