வாழ்க்கைக்கான கல்வி

கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய சமயத்தில் பண்டிதர் ஒருவர் அதை கடக்க படகு ஒன்றில் ஏறினார். ஆற்றை கடந்து பயணம் தொடங்கியபோது, பண்டிதர் படகோட்டியிடம் தன் உரையாடலைத் தொடங்கினார். பண்டிதர் படகோட்டியிடம் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறாயா என்று விசாரிக்க , படகோட்டியோ இல்லை என்று பதிலளித்தான், அதற்கு பண்டிதர் , “ஐயோ! உன் வாழ்க்கையின் கால்வாசி பகுதி வீணாகிவிட்டது. அவ்வாண்டுகள் அனைத்தும் கோதாவரி நீரில் மூழ்கடித்ததற்கு சமம் என்று சோகமாக கூறினார் பண்டிதர்.

அவரிடமிருந்த கை கடிகாரத்தை காட்டி படகோட்டியிடம் மணி பார்த்துக் கூறுமாறு கேட்டார். படகோட்டியோ தன்னிடம் கடிகாரமும் இல்லை, அதை வைத்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று ஒப்புக்கொண்டார். அதற்கு பண்டிதர், “உன் வாழ்க்கையின் அரைவாசி கோதாவரிக்குள் சென்றுவிட்டது” என்று இழிவாக பேசினார்
அவரது அடுத்த கேள்வி செய்தித்தாள்களைப் பற்றியது – அவனுக்கு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் உண்டெனில், அதில் மிகவும் பிடித்த செய்தித்தாள் எது என்று படகோட்டியிடம் கேட்டார்?

படகோட்டியோ தான் எதையும் படிப்பதில்லை என்றும், கவலை கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ள காரணத்தால் செய்திகளை அறிய அக்கறை காட்டுவதில்லை என்றும் பதிலளித்தார். அவனுடைய முக்கால்வாசி வாழ்க்கையும் வீணாக்க பட்டு விட்டதாக வெளிப்படடையாக பண்டிதர் கூறி கொண்டிருக்கும் பொழுது, புயல் மேகங்களால் வானம் இருண்டு, மழை பெய்வதாக அச்சுறுத்தியது.

இம்முறை படகோட்டி பண்டிதரிடம் கேள்வி எழுப்பும் நேரம்!!!

அவன் பண்டிதர் பக்கம் திரும்பி, அவருக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்க, பயந்துபோன பயணியான பண்டிதரோ தனக்கு தெரியாது என்று கூற “அப்படியானால், உங்கள் முழு வாழ்க்கையும் இப்போது கோதாவரியுடன் இணைய போகிறது” என்றான்.

இன்று இந்தியாவில் படித்தவர்களின் நிலையும் இதுதான். இன்றைய கல்வி – ஒருவனுடைய ஆபத்து மற்றும் அவசர காலங்களில், அவனுக்கு உதவும் வண்ணமாகவும் மன நிம்மதியை திருப்பி பெற்று தந்து கைகொடுக்கும் விதமாகவும் அமையவில்லை என்று பகவான் கூறினார்.

செப்டம்பர் 12 அன்று ஒரு சொற்பொழிவில் பகவான் பாபா கூறினார், 1963

ஆதாரம்:அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்) தொகுதி 3, அத்தியாயம் 24, செப்டெம்பர்12 1963.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0