விடைத் தெரியாத வினாக்கள்

ஒரு அரண்மனையில் கோமாளி ஒருவர் இருந்தார், அவர் சதாசர்வ காலமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் மிகவும் தொல்லையாக கருதப்பட்ட்டார். அந்த ஆர்வக்கோளாற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரிடமிருந்து தப்பிப்பதற்காக “கேள்விகள் கேட்க கூடாது” என்றெழுதிய பலகை ஒன்றை மன்னர் வைக்க நேர்ந்தது. ஆனால், ஒரு சமயம் ராஜா தன் மரணப் படுக்கையில் இருந்தபோது, கோமாளியை தன் அருகில் அழைத்து, “நான் போகிறேன்” என்று கிசுகிசுத்தார். உடனே மிகவும் துரிதமாக கோமாளி மன்னரிடம், “நான் அரண்மனை தேரை தயார் செய்ய ஆணையிடட்டுமா?, அம்பாரியுடன் யானை அல்லது அணிகலன்கள் பூட்டிய குதிரை?, பல்லக்கு?, நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? எவ்வளவு காலம் அங்கே முகாமிடுவீர்கள்? ” என்ற வினாக்களை எழுப்பினார்.

கோமாளியிடம் துல்லியமாக கேள்விகளைக் கேட்கும் பாண்டித்தியம் இருந்ததே தவிர மன்னர் மற்றும் கோமாளி ஆகிய இருவரிடத்திலும் அக்கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லை.

ஒருவன் மிக சிறந்த புத்திசாலியாகவே இருந்தாலும், வாழ்க்கை எனும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற பதில்களை அறிந்திருக்க வேண்டும்.

ஆதாரம்: செப்டம்பர் 27, 1960 அன்று பகவான் ஸ்ரீ ஸத்யஸாயி பாபா ஒரு சொற்பொழிவில் கூறியது போல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0