தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அது நிறைவேற்றப்படுவதை, மிக சிறந்த முயற்சிகளாலும் முறியடிக்க முடியாது . தன் சங்கல்பத்தின் மேலாதிக்கத்தைப் பற்றி பகவான் கூறும் கதை இங்கே.

“நான் இறைவனின் உன்னதமான சங்கல்பம் (ஈஸ்வர சங்கல்பம்) உண்மையாவதை எவ்வாறு யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்த்துவதற்காக ஒரு கதையைச் சொல்கிறேன்.”

தினந்தோறும் மாலை வேளையில் கைலாச மலையில் சிவபெருமான் விண்ணவரான தேவர்களுக்கும் , முற்றும் துறந்த துறவியர் மற்றும் முனிவர்களுக்கும் சொற்பொழிவு வழங்குவது வழக்கத்தில் இருந்தது.

ஒரு நாள் பார்வதி தேவி அங்கு கூடிவரும் அனைவரும் ஒருசேர அமரவும், அவர்கள் குளிர், காற்று மற்றும் பனியின் தொல்லையின்றி சொற்பொழிவை முழு கவனத்துடன் கேட்கவும், ஒரு மண்டபம் நிறுவ பரிந்துரைத்தார். இதில் இறைவனுக்கு விருப்பம் இல்லையென்றாலும் , தேவியின் வலியுறுத்தலால் , அவர் சற்றே மனம் தளர்ந்தார். அதற்கு அஸ்திவாரம் போடுவதற்காக ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர், சனியின் பார்வை சாதகமாக இல்லாததையும் அதனால் அம்மண்டபம் தீக்கிரையாக்கப்படும் என்பதையும் முன்னுரைத்தார். இருப்பினும், மண்டபம் கட்டப்பட்டது. சனீஸ்வரர் ஒப்புக்கொள்வாரா என்ற ஐயம் இருந்தாலும், சனியின் கோபத்திலிருந்து அம்மண்டபத்தை காப்பாற்றும் பொருட்டு அவரிடம் உதவி கேட்குமாறு சிவபெருமான் முன்மொழிந்தார்.

இதனால் ஆழ்ந்த வேதனையுற்ற தேவி, அவள் நிர்மாணிக்க நினைத்த மண்டபத்தை தீயினால் அழித்து அதை பெருமையாக ஆணவத்துடன் அறிவிக்கும் வாய்ப்பினை கொடுங்கோலரான சனிக்கு கொடுக்க மனமில்லாமல், தானே அதற்கு தீ மூட்ட முடிவு செய்ந்திருப்பதாக சிவபெருமானிடம் அறிவித்தாள்.

அவ்வாறு செய்வதற்கு முன் அவளிடம் சிவபெருமான் சற்றே காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். தானே நேரில் சென்று சனியை சந்தித்து மண்டபத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும்படி கேட்டுக்கொள்வதாக கூறினார். அவர் பார்வதி தேவியிடம். “ஒருவேளை சனி தனது கோபத்திலிருந்து மண்டபத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டால், நானே திரும்பி வந்து உனக்கு நற்செய்தியை தெரிவிப்பேன்; மாறாக, அவர் பிடிவாதமாக இருந்தால், என் கையை உயர்த்தி உடுக்கையை சுழற்றும் . சமிக்ஞையைக் கேட்டு , நீயே மண்டபத்திற்கு தீ வைத்து, சனியை பெருமைகொள்வதிலிருந்து தவிரத்து விடு” என்று கூறினார். சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி , மண்டபத்தை எரிக்காமலிருக்க உறுதியளித்து அதற்கு பதிலாக ஒரு வரத்தையும் வேண்டினார். அவர் புகழ்பெற்ற சிவதாண்டவத்தை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், அந்த தெய்வீக நடனத்தின் தரிசனத்திற்காக ஏங்குவதாகவும் கூறினார். இறைவன் உடனடியாக ஒப்புக் கொண்டு, தனது தாண்டவத்தை தொடங்கினார். கையை உயர்த்தி, உடுக்கையை ஒலித்தார்! அதைக்கேட்ட பார்வதி தேவி மண்டபத்தை தீக்கிரையாக்கினாள். சிவபெருமானின் திருவுள்ளமும் அப்படியே நடந்தேறியது ”

தெய்வத்தின் திருவுள்ளத்தை யாராலும் எதனாலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் வெல்லமுடியாது

ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 2, அத்தியாயம் 16. அக்டோபர் 17, 1961 இல் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0