தெளிவற்ற ‘உருளல்’

ஸ்ரீ பகவான் ஸத்ய சாயி பாபாவிற்கு சொற்களினால் விளையாடுவது என்பது புதிதல்ல! முன்பு கிருஷ்ணாவதாரத்தின் போதும் அவ்வாறு பல முறை செய்தவராயிற்றே! இதற்கு உதாரணமாக, நவம்பர் 24, 1961 அன்று பிரசாந்தி நிலயத்தில் அளித்த சொற்பொழிவில், சுவாமி இக்கதையை விவரித்தார்

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பில்வமங்கலா என்ற ஒரு பெரிய துறவி இருந்தார். தனது பக்தியால், கிருஷ்ணரை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்க முடிந்தது. இதை கேள்விப்பட்டு, பல நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒரு மனிதர் , தன்னுடைய வலி நீங்குமா நீங்காதா என்பதை கிருஷ்ணரிடமிருந்து தெரிந்துகொள்ளுமாறு பில்வமங்கலாவை வேண்டினார். பில்வமங்கலாவும் அதனை ஒப்புக் கொண்டு கிருஷ்ணர் அவர் முன் தோன்றியபோது, கிருஷ்ணரிடம் அதை பற்றி வினவினார் . அதற்கு கிருஷ்ணர், “உருளுதல் நிற்கும்பொழுது, வலி நின்றுவிடும்” என்று பதிலளித்தார்.

பகவான் கிருஷ்ணரின் பதில் சரியாக விளங்காததால், அது பல விதமான புரிதலுக்கு வழிவகுத்தது. அதற்கு “வலியால் உருளுவதை நிறுத்தும் போது” என்று பொருள் கொண்டான். அந்த பதிலின் உதவியற்ற தன்மையால் திருப்தி அடையாத அவன் கேரளாவை விட்டு வெளியேறி வேறொரு சக்தி வாய்ந்த நபரை சந்திக்க மற்றுமொரு புனித இடத்திற்கு செல்ல முடிவு செய்தான். தான் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகவே இந்த சிக்கலை சந்திக்க நேரிடுவதாக இறைவனின் பதிலை பில்வமங்கலா அவனுக்கு எடுத்துரைத்தார். அவர் “உருளல் நிற்கும்பொழுது” என்பதை “பிறவிக்கு பின் மறுபிறவி என்ற உருளல் / உழலல் நிற்கும்போது” என்று பொருள் கொண்டார்.

அம்மனிதன் காசியை நோக்கி செல்லும் வழியில், குருரம்மா என்று அழைக்கப்படும் ஒரு பக்தியுள்ள பெண் நடத்தும் இலவச உணவகத்திற்கு வந்தான் . அங்கு அந்த அம்மையார் அவனின் வேதனையைக் கண்டு அவனிடம் மிகவும் கருணையுடன் பேசினார். அவன் தான் தன் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறப்பட்டதாகவும், அதனால் கங்கையில் மூழ்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அந்த அம்மையாரிடம் கூறினான்.. அதை கேட்டு மனமிரங்கிய குருரம்மா, அவனுக்கு “கோபிஜன வல்லபாய நம: ” எனும் மந்திரத்தை உபதேசித்து, அதை மீண்டும் மீண்டும் ஜபிக்க சொன்னார். அந்த நாமமே அவனை முழுவதுமாக குணப்படுத்த வல்லது என்றும் சொன்னார். அப்பாவப்பட்ட மனிதனும் தனக்கு அடுத்த முறை வலி வந்த பொழுது அதை உச்சரித்து தன் வலி முழுவதுமாக போய்விட்டதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்! ஆம், வலி போய்விட்டது. அவனுடைய வயிற்றைத் துளைத்த அந்த வலி சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது.

பின்னர் தனது காசி யாத்திரையை முடித்துக் கொண்டு கேரளாவுக்குத் திரும்பிசென்று , பில்வமங்கலாவின் பாதங்களை நமஸ்கரித்தான். அவர் அவனுடைய வயிற்று வலியை பற்றி விசாரித்தார். அது பூரணமாக குணமடைந்துவிட்டதை அறிந்து , கிருஷ்ணரை அழைத்து, “உருளல் ” என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை கூறுமாறு வேண்டினார்.

இந்த யதார்த்தமான உலகையும் (பிரகிருதியையும்) அதனுடைய மாறும் தன்மையையும் – ”உருளுதல் “ என்ற வார்த்தையினால் உணர்த்தியதாகக் கிருஷ்ண பகவான் கூறினார். அம்மனிதன் வேறு எந்த சிந்தனையுமின்றி கடவுளின் பெயரால் மட்டும் வாழ்ந்து வந்ததால் , உருளுதல் {அதாவது மாற்றங்கள்} அவனை அண்டாமல் நிறுத்தப்பட்டது; பகவானின் நாமமும் விதியின் சங்கிலியும் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்க முடியாது. அது விதியின் வல்லமையை உடைக்க தக்கது.

கடவுளின் நாமம் விதியின் சங்கிலியை உடைத்து பிறவிக் கடல்களை கடக்க உதவும் கப்பல் போன்றது.

பில்வமங்கலாவுக்கு கூட “உருளல்“ என்ற வார்த்தையின் உண்மையான மறைபொருள் அப்பொழுதுதான் விளங்கியது.

இறைவனின் நாமம் நாவில் உருளுமானால், பிறவிப்பயனில் உழல்வது நிறுத்தப்படும்!

ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி இரண்டு, அத்தியாயம் 26, 24/11/1961.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0