வெளி மயக்கு

ஒரு மகாராஜாவிற்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் நல்ல உடற்கட்டும் வலிவும் பெற்று வளர்ந்தான். அவன் 22 வயதை அடைந்தபோது அவனது திருமணம்பற்றிப் பேசினான். தந்தை, தனக்குரிய பெண்ணைப் பொதுமக்களிடமிருந்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கும்படித் தந்தையிடம் வேண்டினான் மகன், மன்னரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார். ஒரு நாள் இளவரசன் பாலத்தின் வழியாகக் குதிரைமீதுப் போய்க்கொண்டிருந்தான். அப்போது அழகி ஒருத்தி கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குளிக்கச் சென்றதைப் பார்த்தான். அழகின் இருப்பிடமாக இருந்த அவள்மீது மோகவெறிக் கொண்டு உடனடியாக அவளை அடைய விரும்பினான்.

அந்த நகரைச் சேர்ந்த ஒரு வைசிய வியாபாரியின் மகள் அவள், அவன் மிக்க செல்வ முடையவன். அந்தப் பெண் மிகவும் பக்தியுடையவள்; நீதி நூல்களில் அத்துப்படியானவள்; திருமணம் போன்ற உலகக் காரியங்களை வெறுத்து ஒதுக்குபவள். அரண்மனை அவையினர் அந்த வைசியரை அடைந்து அவரது மகளைத் திருமணம் செய்துத் தரும்படிக் கேட்டனர்; ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டபடியால் அவர்கள் அதிர்ச்சியும் வியப்பும் உற்றனர். வைசியன் ஒருவன் வைசிய மணமகனையே அடைய வேண்டும் என்று அந்த வியாபாரி முடிவு செய்தான். ஆனால் மகளோத் திருமணமே வேண்டாம் என்று அடித்துப்பேசியபடியால், விசயம் மேலும் குழப்பமாகிவிட்டது. தந்தைக்கும், மகளுக்கும் கடுமையான தண்டனைத் தரப்படும் என்று அரண்மனை அவர்களை அச்சுறுத்தியது.

இறுதியில், அதிலிருந்துத் தப்பிப்பதற்குரியத் திட்டம் ஒன்றை மகள் தீட்டினாள். இளவரசனை அவள் நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எட்டு நாட்களுக்குப் பின் இளவரசன் மணம் செய்துக் கொள்ள விரும்பினால் அதற்கு அவள் சம்மதிப்பதாகவும் தந்தையிடம் கூறி, அதை அரண்மனை அதிகாரிகளிடம் கூறிவிடும்படியும் சொன்னாள். அதன்பின் அவள் தினமும் கடுமையான பேதி மாத்திரைகளைச் சாப்பிட்டு, அதனால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கைத் தனித்தனியாகப் பாத்திரத்தில் பிடித்துவைத்தாள். எட்டாம் நாள் இளவரசனைப் பார்க்க அரண்மனைப் பல்லக்கில் சென்றாள்.

அவளும் இளவரசனும் சந்திக்கும் அவைக்கூடத்தில் தன்னுடன் எடுத்துச்சென்ற, நன்றாக மூடப்பட்ட அந்த எட்டுப் பாத்திரங்களையும் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தினாள். அதில் இருக்கும் சரக்கு என்னவென்று யாருக்கும் தெரியாது. எலும்பும் தோலுமாக குழிவிழுந்த கண்கள், ஒட்டிப் போன கன்னங்களுடன் அசிங்கமாகத் தோற்றமளித்த அவளைப் பார்த்தவுடன் இளவரசன் அதிர்ந்துப் போனான் “உனதுக் கட்டழகு எங்கேப் போனது?” என்று கேட்டான். அந்தக் கழிவுப் பாத்திரம் எட்டையும் காட்டினாள் அவள். இளவரசன் அவளைத் திருமணம் செய்யவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. மேனி மினுக்கின் அலங்கோலத்தை அவனுக்கு போதித்ததுக் குறித்து அவள் மகிழ்ந்தாள்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0