அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?

பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. இறையருள் உனது கர்ம பலன்களை அல்லது முன்ஜன்மத்தின் தீவினைப் பயன்களை ரத்து செய்துவிடும். உனக்கு எந்தத் தீங்கும் நேராது.

ஒரு சிறிய உதாரணம். மருந்துக்கடையில் பல மருந்துகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றின் மேலும் உற்பத்தி செய்த தேதியும் மருந்தின் செயலிழப்புத் தேதியும் உள்ளன. செயலிழப்புத் தேதிக்குப் பின்னர் அந்த மருந்து பலன் தராது. பயனற்றுப் போய்விடும். அதைத்தான் கடவுள் செய்கிறார். உன் பிராரப்த கர்மம் செயலிழந்ததாக மருந்துப்புட்டிமீது ஒரு செயலிழப்புத் தேதியை அச்சடித்துவிடுகிறார். அதாவது இந்த ஜன்ம்பத்தில் நீ படும் துன்பம் செயலிழக்கிறது. உடனே உன் துன்பம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தமது கருணைப் பெருக்கால் இப்படித்தான் சுவாமி உனக்கு துன்பத்திலிருந்து விடுதலை கொடுக்கிறார்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0