கர்ம நிவாரம் சாயிபாதம்!

  • உன் கர்மா தீர்ந்தது
  • குறையொன்றுமில்லை
  • பிறவி உனக்கில்லை
  • என்று ஸ்வாமி சொல்லும்
  • சுபதினத்திற்காகவே
  • தவிக்கிறது
  • ஒவ்வொரு ஜீவனும்…
  • சாயிஸ்ருதியின் தரிசனத்தில்
  • ஸ்வாமி உற்றுப் பார்த்தார்
  • புரியாமல் விழித்தேன்
  • பொற்பாதம் தொழுதேன்.
  • அங்கொருவர் சொன்னார்
  • ஸ்வாமி உற்றுப் பார்த்தது
  • உன்னையில்லை
  • உன் கர்மாவை
  • உன் பூர்வமுகத்தை
  • புண்ணிய பாவத்தை…
  • ஜீவனின்மேல் அவர்பார்வை
  • விழும்போதே
  • அதன் கர்மக்கணக்கை
  • வாசித்துவிடுகிறார்.
  • இப்பிறவியில் ஜீவன்
  • கடைத்தேறுமா?
  • கர்மா தீருமா?
  • அதன் அத்தனை
  • பிறவிகளையும்
  • படம்பிடித்து விடுகின்றன
  • பகவானின் கண்கள்!
  • உன்னைப்பார்க்குபோது
  • முன்பும் முன்பும்
  • நீ யார் என்பது
  • ஸ்வாமிக்குத் தெரிகிறது!
  • கர்மபாக்கி கடன்பாக்கி
  • அதை ஜீவன் தீர்க்கும்போது
  • பரமாத்மா சாட்சி மட்டுமே
  • என்கிறார் பகவான்.
  • ஒரு ஜீவனின்
  • ஒட்டுமொத்தப் பிறவிகளின்
  • கர்மமூட்டை சஞ்சிதம்.
  • இந்தப்பிறவியில்
  • தீர்த்தாக வேண்டும் என்று
  • தீவிரவாதியாய் மிரட்டுவது
  • பிராரப்தம்.
  • வாவா உன்னைக்
  • கவனித்துக் கொள்கிறேன்
  • என்று
  • அடுத்தபிறவிக்காகக்
  • காத்திருப்பது ஆகாமியம்.
  • ஸ்வாமி சொல்கிறார்
  • உன்வினைக்கேற்பவே
  • சுழல்கிறது பிறவி.
  • இன்று நிகழ்வதெல்லாம்
  • உன்னால் நேர்ந்தவை;
  • நிச்சயிக்கப்பட்டவை.
  • அவரவர்க்குரிய
  • கர்மக்கடிதத்தைக்
  • கொடுக்கும்
  • அஞ்சல்காரனே நான்.
  • அதீதபக்தரென்றால்
  • கர்மக்கணக்கை தாண்டியும்
  • கருணைபொழிவதுண்டு!
  • யாவரேயானாலும்
  • கடந்த பிறவிக்கர்மாவைஅவர்
  • தீர்த்தாகவேண்டும்.
  • மகான்களும் ரிஷிகளும்
  • கர்மத் தீர்வுக்காய்
  • பிறந்து பிறந்து
  • பிறந்ததுமே இறந்து
  • பிறவிப்பிணி தீர்ப்பதுண்டு.
  • சீதை பட்டதுவும்
  • மீரா பட்டதுவும்
  • சக்குபாய் துடித்ததுவும்
  • தேவகிரியம்மை
  • சீதம்மா பட்டதுவும்
  • கர்மப் பயனே!கர்மப்பயனே!
  • எல்லாப்பிறப்பும்
  • பிறந்திளைத்தேன் என்று
  • புலம்புகிறார் மணிவாசகர்
  • எத்தனை பிறவிகள்!?
  • எத்தனை உறவுகள்!?
  • அப்பன் எத்தனை அப்பனோ?
  • அம்மைஎத்தனைஅம்மையோ?
  • என்றுபாடுகிறார் பட்டினத்தார்
  • உண்மையான
  • அம்மையப்பன் ஆண்டவனே
  • அல்லவா?
  • நற்கருமப் பலனால்
  • பிறவியின் ஒருபாதி வேதனை
  • மறுபாதியில் விடுதலை
  • முன்பின்னாய் இது மாறும்.
  • பூர்வபுண்ணியம்
  • வங்கிச்சேமிப்பாயிருந்தால்
  • அராஜகம் செய்தாலும்
  • அவன்
  • சொர்க்கத்தில் மிதப்பான்
  • உச்சகட்டப்புகழ்
  • உயர்செல்வாக்கு
  • புண்ணியம் தீர்ந்ததுமே
  • அவனை
  • நரகம் தன்மடியில்வாரிப்
  • போட்டுக்கொள்ளும்.
  • ஏன் நடந்தது
  • எதனால் நேர்ந்தது
  • என்று கேட்காதே
  • எல்லாம் உன் பூர்வமூட்டை.
  • நீ செய்ததுதான்
  • திரும்புகிறது உனக்கு
  • தீராதகால்வலி தலைவலி
  • மேல்வலி வயிற்றுவலி
  • என்று
  • வியாதிகளின்
  • நெடுங்கால முற்றுகை.
  • காயங்களிலேயே
  • எரிந்துகொண்டிருக்கிறது
  • காலம்
  • கண்ணீரிலேயே
  • மூழ்கியிருக்கிறது
  • வாழ்க்கை.
  • வாழ்வெனும் கடலில்
  • ரணங்களே அலைகளாய்
  • மீண்டும் மீண்டும்
  • பொங்கிவந்து கரையைச்
  • சேதப்படுத்துகின்றன.
  • வங்கிக் கணக்கிலோ
  • குபேர நிதி
  • வைரவைடூரியங்கள்
  • உடம்பின் நோய்
  • அனுமதிப்பதோ
  • ஒரு கவளம் சோறும்
  • கால்குவளை நீரும்!
  • வாழும்வயதில்தனிமரமாவதும்
  • பிஞ்சில் உதிர்வதும்
  • இளங்குருத்து விபத்தில்
  • சிதறிப் போவதும்
  • பதறும் வேதனை
  • தொடர்கதையாவதும்
  • கர்மப்பலனே கர்மப்பலனே
  • இன்னொருத்தியின்
  • குழந்தையைக்
  • குருடாக்கியவளுக்கு
  • இப்பிறவியில்
  • குருட்டுக்குழந்தை.
  • வைத்தியத்தால்
  • பலரைப் பரலோகம்
  • அனுப்பியவனின் அடுத்தபிறவி
  • படுக்கையிலேயே கிடக்கிறது.
  • நீர்விரயம் செய்தவனுக்கு
  • நீர்சம்பந்த வியாதி.
  • உணவை துச்சமாய்
  • வீசி எறிந்தவனே
  • அடுத்த பிறவியில் அதைக்
  • குப்பைத் தொட்டியில்
  • பொறுக்குகிறான்.
  • பூர்வகொலைகாரனே
  • பொய்வழக்குப்போடப்பட்டு
  • சிறையில் சிதைகிறான்
  • இப்போது.
  • செய்யாதது வாராது
  • செய்தவினை நுகராமல்தீராது
  • எந்தவேதனையும்வாசனையும்
  • பூர்வ எச்சம்தான்
  • அடுத்தபிறவியில்
  • அனுபவிக்கும் மிச்சம்தான்.
  • பூர்வத்தில் நீ போட்டது
  • இப்போது முளைத்திருக்கிறது
  • மூலிகை முளைப்பதும்
  • காளான் முளைப்பதும்
  • உன்னால்தானே தவிர
  • என்னால் இல்லை.
  • எதிரொளி எதிர்ச்சொல்
  • எதிரொலிதான் வாழ்க்கை!
  • காலத்தொலைக்காட்சியில்
  • தொடரும் உன்
  • கர்மத் தொடர்கதையை
  • முடித்துக் கொள்.
  • கர்மச் சுழலிலிருந்து
  • விடுதலை பெறு.
  • மாயன் பதம் பணிந்தால்
  • போயபிழையும்
  • புகுதருவான் நின்றனவும்
  • தூசாகும் என்கிறாள் கோதை.
  • கர்மாவை மூட்டைகட்டி
  • எங்கும் நீ எறிய முடியாது.
  • தீவிரசாதகத்தால் அதை
  • எரிக்கலாம். கர்மா
  • கொஞ்சம் கொஞ்சமாய்க்
  • குறையும் எரியும்.
  • அதீத பக்தியால்
  • அழுதழுது ஆண்டவனுக்காய்ப்
  • பரிதவிப்பதால்
  • தைலதாரையாய்ப் புரியும்
  • தானதர்மங்களால்
  • தியாகத்தால்
  • நித்ய நிர்மலப்பண்புகளால்
  • சத்யமாய் உன்கர்மா தீரும்!
  • அதன்பின் நீ
  • பளிங்குப் பனிமலர் பாரிஜாதம்
  • என் பதமலரில்
  • நித்யவாசம் செய்யும்
  • மனோரஞ்சிதம் பவித்ரபத்ரம்!
  • பிரேமஸ்வரூபமே!
  • புத்தம்புது மலராய் வந்து
  • மணக்கப்போகும் உனக்காக
  • என் சன்னிதி காத்திருக்கிறது!
  • என்றும் சாயிசேவையில்
  • கவிஞர்.பொன்மணி
  • -ஸ்ரீ சத்யசாயிகவிதைகள்
  • ஜெய் சாய்ராம்!
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0