நிலவில் முழு அழகு

 • பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா
 • ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா
 • சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின்
 • பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா !
 • சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே
 • பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தே பாசம் பந்தமுடனருளாசி
 • தருவாயே ஸ்ரீ சத்ய சாயீஸ்வரா
 • திருவெண்காட்டீசா ஸ்ரீசைல புரிவாசாஅருணாச்சலப் பரமேசா
 • முப்புரமெரித்த உமைபாதி பாகா திருச்செங்கோட்டீசா
 • திருஆலவாயா ஆலங்குடி குருவே ஆபத்சகாயா,
 • திருக்குற்றாலபுரீசா ஈஸ்வரா,
 • ஆலமுண்டவா அருளே அமுதேஅரனே
 • சந்திரசேகர சந்திரமவுலீஸ்வரா
 • ஞாயிறும் திங்களும் நீ ஞால ஞானகுருவாய்
 • தெய்வமாய் அன்னை தந்தையாய்
 • அருவுருவமுமாய் வருகவே
 • உன் மலரடி சரணம் சரணாகதி சாயீசா
 • அரணாயிருந் தருளாசி தருவாய்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0