நிலவில் முழு அழகு
- பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா
- ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா
- சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின்
- பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா !
- சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே
- பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தே பாசம் பந்தமுடனருளாசி
- தருவாயே ஸ்ரீ சத்ய சாயீஸ்வரா
- திருவெண்காட்டீசா ஸ்ரீசைல புரிவாசாஅருணாச்சலப் பரமேசா
- முப்புரமெரித்த உமைபாதி பாகா திருச்செங்கோட்டீசா
- திருஆலவாயா ஆலங்குடி குருவே ஆபத்சகாயா,
- திருக்குற்றாலபுரீசா ஈஸ்வரா,
- ஆலமுண்டவா அருளே அமுதேஅரனே
- சந்திரசேகர சந்திரமவுலீஸ்வரா
- ஞாயிறும் திங்களும் நீ ஞால ஞானகுருவாய்
- தெய்வமாய் அன்னை தந்தையாய்
- அருவுருவமுமாய் வருகவே
- உன் மலரடி சரணம் சரணாகதி சாயீசா
- அரணாயிருந் தருளாசி தருவாய்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்