பாலாபிஷேகம் நடக்குது
- பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது
- சாயி முருகனுக்கு
- பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து
- மணக்குது சாயி கந்தனுக்கு
- வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள்
- மணம் வீசுது சாயி சண்முகனுக்கு
- வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி
- வழிநடத்துது சாயி குகனுக்கு
- கேள்வியாகவும் வந்து பதிலும் சொல்கிறான்
- சாயி வேலாயுதானாக
- ஆறுமுகமாகக் குன்றேறி நின்று ஆனந்தமளிக்கிறான்
- சாயி சரவணணாக
- ஏறுமுகம் தானென்றுமே எனச் சொல்லிச் சிரிக்கிறான்
- சாயி வேலனாக
- ஆறுபடை வீடுகளில் ஆட்சி செய்கிறான் சாயி பாலனாக
- ஆரவாரக்கடல் அலைகளிலே ஆனந்திக்கிறான்
- சாயி சேந்தனாக
- சக்தி பாலனாக சாந்நித்ய மளிக்கிறான் சாயி செந்தில் நாதனாக
- தந்தைக்குப் பிரணவம் சொன்னான் சாயி சுவாமிநாதனாக
- சாஸ்வதமாய்ச் சகலருக்கும் காட்சியாகிறான் சாயி குமரனாக
- சங்கீதமா யினிமை யளிக்கிறான் சாயி கார்த்திகேயனாக
- சங்கேதமாயும் சாட்சியாகிறான் சாயி கதிர்வேலனாக
- பங்கய மலரடியிலருட் கருணைதந்து வாழ்வில்
- மீட்சி தருகிறான் சாயி பாலமுருகனாக
- சத்தியப்பாதையில் அன்பு மதம் இனம் மொழியில்
- நித்தியமாகி அருள்கிறான் பிரசாந்தி
- ஸ்ரீசத்யசாயிநாத சுப்பிரமணியனாக.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்