பாலாபிஷேகம் நடக்குது

 • பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது
 • சாயி முருகனுக்கு
 • பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து
 • மணக்குது சாயி கந்தனுக்கு
 • வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள்
 • மணம் வீசுது சாயி சண்முகனுக்கு
 • வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி
 • வழிநடத்துது சாயி குகனுக்கு
 • கேள்வியாகவும் வந்து பதிலும் சொல்கிறான்
 • சாயி வேலாயுதானாக
 • ஆறுமுகமாகக் குன்றேறி நின்று ஆனந்தமளிக்கிறான்
 • சாயி சரவணணாக
 • ஏறுமுகம் தானென்றுமே எனச் சொல்லிச் சிரிக்கிறான்
 • சாயி வேலனாக
 • ஆறுபடை வீடுகளில் ஆட்சி செய்கிறான் சாயி பாலனாக
 • ஆரவாரக்கடல் அலைகளிலே ஆனந்திக்கிறான்
 • சாயி சேந்தனாக
 • சக்தி பாலனாக சாந்நித்ய மளிக்கிறான் சாயி செந்தில் நாதனாக
 • தந்தைக்குப் பிரணவம் சொன்னான் சாயி சுவாமிநாதனாக
 • சாஸ்வதமாய்ச் சகலருக்கும் காட்சியாகிறான் சாயி குமரனாக
 • சங்கீதமா யினிமை யளிக்கிறான் சாயி கார்த்திகேயனாக
 • சங்கேதமாயும் சாட்சியாகிறான் சாயி கதிர்வேலனாக
 • பங்கய மலரடியிலருட் கருணைதந்து வாழ்வில்
 • மீட்சி தருகிறான் சாயி பாலமுருகனாக
 • சத்தியப்பாதையில் அன்பு மதம் இனம் மொழியில்
 • நித்தியமாகி அருள்கிறான் பிரசாந்தி
 • ஸ்ரீசத்யசாயிநாத சுப்பிரமணியனாக.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0