விழிமூடி வழிகேட்டு

 • ஆலவிதையில் கிளைகளில் அஸ்வத்தாமனுன் விஸ்வாதாரம்
 • ஆலமுண்டு அனைவரையும் காத்ததுன் விஸ்வாசக்
 • கருணாதீரமது னதன்பின் ஈரம்
 • சிவசாரம் சத்யசாயி சனாதனம்
 • கணக்கிலடங்கா உன்மகிமைப் பிரதாப மெடுத்துரைக்க
 • ஒரு ஆயுள்போறாது, தீராதே,
 • எல்லையில்லா அவ்வானந்தத்தின் அளவே
 • அள்ள அள்ளக் குறையாத ஆனந்த அன்புக்கடல் பாபாவின்
 • அனந்தகோடி பிரம்மாண்டப் பரப்பிரும்மம்
 • அண்டம் காத்து வழி நடத்தும்
 • கருப் பிண்டம்கூட விழிமூடி வழிகேட்டு வாழ்வியலில்
 • பிறந்துன் சங்கல்பத்தால் கடைத்தேரக்
 • கண் மலரும், வழிநடக்கும்.
 • கல்லில் தேரைக்கும் சொல்லில் பொருளுக்கும்
 • உன் அன்புரையிலருள் கிட்டி ஆனந்தமயமாகும்
 • உன் வாழ்வெங்கள் செய்தியே, உன் வார்த்தைகளெங்களின்
 • சனாதனச் சாராம்சமே சுவாமி
 • எங்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய்
 • நீயிருந்தே குறையாதஅன்பும் பக்தியும்
 • சேவைகளாற்றிடும் உடல், உள்ள, மன, பலம்
 • தந்து காத்தருள வரமருள்கவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0