உன் கருணைக் கடாட்சங்கள்

  • தென்பொதிகைத் தென்றலாய், சுகமாய் வருடிச்செல்லும்
  • உன் கருணைக் கடாட்சங்கள்
  • மேருவின் சாட்சியாய், உயர்ந்து நிற்கும் உன் லீலா
  • வினோத அற்புத அதிசயக்காட்சிகள்
  • பஞ்ச நதிகள் போல், என்றுமே வற்றாதுன்
  • அன்பின் அலைகள்.
  • யுகங்கள் மாறலாம், உன் பக்தி அரண், மாறாமல்
  • என்றுமனைத் துயிர்களையும் காத்து நிற்கும்
  • பிரசாந்தி நிலையத்தின் மனச் சாந்தி தெய்வமே
  • பிறசாந்தி வேண்டாம் உன் பிர காந்தி
  • போதுமாய் எண்ண வைக்கிறாய்
  • ராதையின் கண்ணணாய், சீதையின் ராமனாய், சிவசக்தி
  • ஸ்வரூபனாய் ஸ்ரீ சத்திய சாயி யாயருள்கிறாய்
  • கஜேந்திர மோட்சமாய்ச் சடுதியி லழைத்ததும்
  • உடன் வந்துதான் காக்கிறாய்
  • சித்ராவதியும் அறியும் உன் விசித்திர
  • அற்புத லீலா வினோதங்களைச் சித்திரமாய்ப்
  • பர்த்தித்தலம் பார்த்து இப்பாரே வியக்கிறது உன்
  • அதி அற்புதச்சரிதையின் வியாபகம்
  • பார்த்தும் எண்ணிலடங்காச் சேவைகளா ற்றுமுன்
  • அன்புக்கருணைப் பிரவாகத்தினையும்
  • மானிடராய்ப் பிறத்தல் அரிது தான், அதிலும் உன்
  • சாயி பக்தராய்ப் பிறந்துன் பற்பல சேவைகளாற்றுதல்
  • அரிதிலும் அரிது தான் சுவாமி
  • உன் அவதார காலத்தில் வாழ்வது
  • எங்கள் பிறவிப் பயனின் முக்தி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0