அனில் குமார்: சுவாமி! எல்லோரிலும் தெய்வீகம் இருக்கிறதென்று சொல்கிறீர்கள். நாம் பிறப்பதற்கு முன் அது எங்கே இருந்தது? மரணத்துக்குப் பின் அது இருக்கிறதா?

பகவான்: தெய்வீகம் உள்ளது. தெய்வீகம் அழிவற்றது, தூயது, களங்கமற்றது. அதற்குப் பிறப்போ இறப்போ கிடையாது. அது நிரந்தரமானது, நிலையானது. காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது. பௌதீக விதிகள் அனைத்தையும் கடந்தது தெய்வீகம்.

உங்கள் கேள்வி இதுதான்: நீங்கள் பிறக்குமுன் தெய்வீகம் எங்கே இருந்தது, மரணத்துக்குப் பின் எங்கே போகும், வாழும்போது எங்கே இருக்கிறது? அந்தச் சுவரில் மின்கம்பியைப் பார்க்கிறீர்கள். ஆங்காங்கே பல்பு மாட்டும் ஹோல்டர்கள் உள்ளன.

பல்பை ஹோல்டரில் பொருத்தினால்தான் வெளிச்சம் வரும், இல்லையென்றால் வராது. ஏன்? மின்கம்பி வழியாகச் செல்லும் மின்சாரம், ஹோல்டரில் இருக்கும் பல்பில்தான் பாயும். உன் கையில் பல்பு இருந்தால் மின்சாரம் பாயாத காரணத்தால் அது எரியாது.

இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல்புக்குள் நுழையும் மின்சாரம் புதிதாக உண்டாகவில்லை. அது மின்கம்பியில் முன்னரே இருந்தது. பல்பைக் கழட்டினால் மின்சாரம் என்ன ஆகும்? அது அந்த மின்கம்பியில்தான் இருக்கும். வித்தியாசம் என்னவென்றால், அந்த மின்சாரத்தை நீங்கள் ஒளியாக உணரமாட்டீர்கள். அதுபோலவே, உடல் என்பது ஒரு பல்பு, தெய்வீகமென்னும் மின்சரம் அதில் பாயும்போது உயிரென்னும் ஒளி பிறக்கிறது. உடலென்னும் பல்பைக் கழட்டிவிட்டாலும் தெய்வீக மின்சாரம் மறைந்திருக்கும்; அது பிறப்புக்கு முன்னும், வாழும்போதும், மரணத்துக்குப் பின்னும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0