அனில் குமார்: சுவாமி! தெய்வீகத்தை அலசி ஆராய முடியுமா? அதை அறிவினால் அறியமுடியுமா?
பகவான்: உலகத்தின் எல்லா அனுபவங்களும் காலம், இடம் என்ற வரையறைகளுக்கு உட்பட்டவை. புறவுலகில் உள்ளவற்றை அனுபவிக்க உனது புலன்கள் உதவுகின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும் ஐம்பூதங்களை ஆராய்ந்து, அவற்றை வெவ்வேறு வகையில் சேர்த்தும் பிரித்தும், மனிதன் வசதியாக வாழ்வதற்குச் சிலவகை சுக, சௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. மின்னணுக் கருவிகள், கணினி போன்றவை இதில் அடங்கும்.
விஞ்ஞானி ஆய்வு நடத்துகிறார். ஆனால் ஓர் ஆன்மசாதகனின் தெய்வீக அனுபவங்களை ஓர் ஆய்வுக்கூடத்தில் நடத்தமுடியாது. தெய்வீகம் குறித்த எதுவும் சொற்களுக்கு அப்பாற்பட்டது, அவற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது? புரிதலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தை எப்படிக் கற்பனை செய்வது?
உனது அறிவுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட தெய்வீகத்தை எப்படி அலசி ஆராய்வது? ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டது அறிவியல், அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது மதம். விஞ்ஞானத்தில் நீ ஆராய்கிறாய், மதத்திலோ நீ அனுபூதியாகப் பெறுகிறாய்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: