அனில் குமார்: சுவாமி, சாகார (உருவமுள்ள) கடவுளை வழிபடுதல், நிராகார (உருவமற்ற) கடவுளை வழிபடுதல் இவ்விரண்டில் எது மேலானது?
பகவான்: என் கருத்துப்படி இரண்டுமே சமமானவைதாம். இரண்டில் எதுவும் மற்றதைவிட உயர்ந்ததல்ல. இப்போது நீ கோயம்புத்தூரில் இருக்கிறாய். இங்கே நிலம் எல்லா இடத்திலும் சமதளமாக இருக்கிறது; யாரும் அதைச் சமப்படுத்தவில்லை. இப்படி இந்த நிலத்தை யாரும் செய்யவில்லை. இது அடிப்படையில் கோயம்புத்தூரின் இயற்கை.
ஆனால், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளது. இங்கே எவரும் மலைகளை ஒட்டிப் பொருத்தவில்லை. அது அப்படியே உண்டானது. கோயம்பத்தூரும் கொடைக்கானலும் வேறு வேறானவை. ஒவ்வொன்றுமே நிறைவானதுதான், அததற்கான வழியில் அப்படி உள்ளது.
அதுபோலவே, உருவம் அருவம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகளும், சத்தியத்தைத் தேடுவோருக்கும், ஆன்மீக சாதகர்களுக்கும் சமமாகவே பயன் தருபவை.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: