அனில் குமார்: சுவாமி! தசரத சக்ரவர்த்தி அவருடைய புத்ரகாமேஷ்டி யாகம் ஆகியவை குறித்து நாங்கள் அறிவோம். ஜனக மகாராஜரைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்.
பகவான்: ஜனகர் ஒரு ராஜயோகி, பெரிய ஞானி, உடல் பிரக்ஞையே இல்லாதவர். அதனால் அவர் விதேஹர் (உடற்பற்று இல்லாதவர்) என அறியப்பட்டார். அவரது மகளான சீதை, வைதேஹி என அறியப்பட்டாள். மிகுந்த குரு பக்தியும், சிறந்த சாஸ்திர ஞானமும், பற்றின்மையும் கொண்டவர் ஜனகர். அவர் சீதையின் திருமணத்தைக் கடமையாகக் கருதிச் செய்தார். பின்னாளில் ராமர் சீதையுடனும் லட்சுமணருடனும் வனவாசம் சென்றார். அவர்கள் காட்டில் பல ஆண்டுகள் இருந்தபோதும், ஜனகர் காட்டுக்குள் கால் வைக்கவே இல்லை. அவர் அத்தனை ஞானச்செல்வமும் வைராக்கியமும் கொண்டிருந்தார்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு