அனில் குமார்: சுவாமி! பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் ஏன் தவம் செய்யக் காடுகளைத் தேர்ந்தெடுத்தார்கள்? தனிமையை ஏன் விரும்பினார்கள்?

பகவான்: நிச்சயமாக அதில் பொருள் உள்ளது. தவம் செய்ய ஏன் காட்டுக்குப் போனார்கள்? இதோ ஓர் உதாரணம். ஒரு நகரத்தில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் கடைகள் இருக்கும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் உன்னைக் கவரும். இசை, தின்பண்டங்கள், துணிமணிகள் எல்லாம் உன்னைக் கவர்ந்திழுக்கும். உன் கண்முன்னால் இருப்பதால் அந்தப் பொருட்கள் உன்னை ஈர்க்கின்றன. ஆனால் ஒரு காட்டில் உன் கவனத்தை ஈர்க்கவோ, திசை திருப்பவோ எதுவும் இல்லை.

தியானம் செய்வதற்கான சாந்தமும் அமைதியும் பெறுவதற்குத் தனிமை உதவுகிறது. அது ஆன்மீக வாழ்க்கைக்கு இசைவான சூழலைத் தருகிறது. எனவேதான் ரிஷிகளும் முனிவர்களும் காடுகளுக்குப் போய்த் தவம் செய்தார்கள். சொல்லப் போனால் “forest” என்பது ஆன்மீகரீதியாக “for rest”.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0