அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கடவுள் எங்கும் இருக்கிறார். கருணைகூர்ந்து தெய்வத்தின் இந்த இயல்பை விளக்குங்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு, இலை, கிளைகள் என்று உண்டாகிக் கடைசியில் பூப் பூக்கிறது.
அந்தத் தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விதையிலிருந்து வந்த காரணத்தினால் அவற்றில் விதை மறைந்துள்ளது. இறுதியாக, பழத்தில் இருக்கும் விதைக்குள்ளே முதலில் விதைத்த விதை உள்ளது. அதுபோலவே கடவுள் பிரஞ்சம் அனைத்திலும் இருக்கிறார். உலகம் என்பது மரம், கடவுள்தான் விதை, அனைத்து ஜீவன்களும் உலகென்னும் மரத்தில் பழுத்த கனிகள்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு