அனில் குமார்: சுவாமி! ராஜநீதி, ராஜகீயம் (அரசியல்) என்ற சொற்களைக் கேட்கிறோம். இரண்டும் ஒன்றேதானா? நம்மைச் சுற்றி நாம் காண்பதை என்னவென்று சொல்வது?

பகவான்: ராஜநீதியும் ராஜகீயமும் ஒன்றாக இருக்கவே முடியாது. ராஜயோகம் என்பதைப் பார், யோகங்களிடையே மிக அதிகமாக மதிக்கப்படுவது, ஓர் அரசனைப் போல நிற்பது என்பதால் அந்தப் பெயர். அதுபோலவே, ஒழுக்க நெறிகளுக்குள் மிக உயர்ந்ததும், மனிதருக்குள் அரசனைப்போன்ற அந்தஸ்து உடையதும் ராஜநீதி எனப்படும். மிருகங்களின் அரசன் சிங்கம் என்பது உங்களுக்குத் தெரியும். ராஜநீதி சத்தியத்துடன் சேர்ந்தது, தர்மத்துக்குக் கட்டுப்பட்டது, எல்லா நலன்களையும் தருவது. இன்றைக்கு இருப்பது ராஜநீதி அல்லது ராஜகீயமான அரசியல் தந்திரமல்ல. அது ராஜகய்யம், அதாவது கெட்ட எண்ணம், பொறாமை, வெறுப்பு ஆகியவற்றால் பிறந்த அரசப் போராட்டம். இவையெல்லாம் கடும் சண்டைகள். எனவே, இவை ராஜகய்யம்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0