அனில் குமார்: விக்கிரகங்கள், மரங்கள் போன்றவற்றை வழிபடுவதற்காக ஹிந்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். இது மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்பதாகப் பலர் எண்ணுகிறார்கள். சுவாமி இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்?
பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன.

புற்றை சுப்ரமணியராக வழிபடுகிறார்கள், பறவையை விஷ்ணுவின் வாஹனமாக மதிக்கிறார்கள், ஸ்ரீ கிருஷ்ணர் தூக்கிய கோவர்த்தன மலை ஆன்மீகரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது, அஸ்வத்த விருக்ஷம் (அரசமரம்) கூட வழிபடப்படுகிறது. நமது சாஸ்திரங்களின்படி எல்லாமே தெய்வீகம்தான். இது மூடநம்பிக்கையல்ல.
இது ஒருபோதும் குருட்டு நம்பிக்கையும் கிடையாது. சனாதன தர்மம் நம்மை எல்லா இடத்திலும் தெய்வீகத்தை உணர்ந்து அனுபவிக்கச் சொல்கிறது. இதுதான் ஆன்மீக வழி. இதுதான் மிகவுயர்ந்த, புனிதமான அனுபவம்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: