ஆத்ம தத்துவம் நுட்பமானது

ஒரு குருவுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர், அவர்களுக்கு நல்ல செய்திகளைப் போதித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, “நீ தியானம், பூஜை செய்யும்போது எவ்வித இடையூறு வரினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையுடன் பூஜை, தியானம்  பாதிக்காதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார். குருவிடம் மிகுந்த பயபக்தி உடையவர்கள் சீடர்கள்.

சில சீடர்கள் ஆசிரமத்தில் குருவுடன் தங்கினர். குருவின் பிறந்தநாள் ஒன்றில் சீடன் ஒருவன் இறைவனின் 108 நாமாவளிகளைக் கூறிச் சிறப்பாக வழிபாடு செய்ய வேண்டுமென்று விரும்பினான். குருவின் படத்தையும், 108 மலர்களையும் பெற்று சம்பிரதாய முறைப்படி பூஜை செய்ய அவன் விரும்பினான். 

மற்றொரு சீடன், குருவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். குரு வெளியே போகும்போது ஆசிரமத்திலிருந்த சீடனைப் பார்த்து, “முன் கதவை மூடி விட்டு எச்சரிக்கையாக இரு” என்று கூறினார்.

அன்றைக்கு வெயில் மிகக்கடுமையாக இருந்தது; குருவிற்கு காலில் செருப்பும் கிடையாது, வெயிலைத்தடுக்கத் தலையில் முடியும் கிடையாது. குரு ஆசிரமத்துக்கு வந்து கதவைத்தட்டித் திறக்கும்படிக் கூறியபோது சீடன் உள்ளே பூஜை செய்து கொண்டிருந்தான். உடனே சீடன், “நான் பூஜை செய்கிறேன்;  பூஜை இடையில் தடைப்படக்கூடாது;  எனவே, பூஜை முடியும் வரை வெளியே காத்திருங்கள்” எனக் கூறினான். 

இன்றைக்கு 99% சீடர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். யாருடைய அருள் வேண்டுமோ, அவருடைய படத்திற்குத்தான் சீடர்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குரு நேரில் வந்து கதவைத் தட்டிய பிறகும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0