இறைமுகத் துறைமுகம்

  • இறை, இறங்கி, இரங்கி, வந்து, அவதரித்துக்
  • கருணை அளிக்க வந்தது
  • உரைத்த அருள், அற, அறிவுரைகள் ஈடில்லா
  • மாணிக்கப்பொன் முத்துக்கள்
  • பாபாவின் இறைமுகம் நம் இதயக்கோவில்தனில்
  • வீற்றிருக்கும் நிறைமதி முகம்
  • மனமந்திரத்தி லூடுருவியுள்ள உறைமுகம்
  • பன்மதப்பக்தர்கள் கூடிச் சங்கமிக்கும்
  • கருணா சாகரத் துறைமுகம்
  • ‘நான் இருக்கப் பயமே’ னென்று கூறித் தேற்றிடும் தாயுமான
  • நல்கலங்கரை விளக்கம்
  • பவதாரக் கடலினில் உயிர்களுக்குக் கரைசேர்க்கும்
  • சனாதனச் சாரதித் தெய்வம்
  • ஆழிசூழ் உலகினிலே ஊழ்வினை நீக்க வந்த
  • ஆதிப்பரப் பிரம்ம ஸ்வரூபம்
  • மாதா பிதா குரு சகாவாய்ச்சகலருக்கும் நன்மையளித்துக்
  • காக்க வந்த கலியுகக்கண்கண்ட பேசும் தெய்வம்
  • சுவாமி உன் சாய்ராம் தாரக மந்திரமே பாயிரம், பதிகம்,
  • பாசுரம், திவ்யப்பிரபந்தமே
  • குவலயத்தைக்காத்திடஅபயஹஸ்தமளித்திட வருவாயருள்
  • தருவாயே போற்றுதும் சாயி ஞானதீபமேற்றுதும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0