உடல் உள்ள மனக் கவசமாய்

  • அமிர்தமாம் அள்ளித்தரும் கருணையைப்
  • பொழிந்திட அமிர்தவர்ஷினி நீ இருக்க
  • அன்பில் தோய்த்தெடுத்து அரவணைத்து ஆறுதல் சொல்ல
  • ஆயிரம் அன்னைகளாயுன் துணை இருக்க
  • வேண்டியது வேண்டாமலே வேண்டும் வரம் தர
  • உன் அருள் அன்பிருக்க
  • வாழ்வியலில் வரும் துயர் துன்பங்களை நீக்கி
  • இனிமை இன்பம் நற்பவி இனிதாய் நல்க
  • உன் சாயி நாமம் இருக்க
  • நரகத்திற்குச் செல்லாமல் தடுத்தாட் கொள்ள
  • உன் நாமஸ்மரணை யிருக்க
  • நெக்குருகப் பாடி மகிழ்ந்து உலாவர
  • உன் நகர சங்கீர்த்தனம் இருக்க
  • நிதானமாய் உன்னை நெஞ்சில் நிறுத்தி தியானம்
  • செய்ய வட விருட்சத் தபோவனம் இருக்க
  • எங்கும் எதிலும் எப்போதும் செயமே கிட்ட
  • உன் அருமைத் தியானம், செபமிருக்க
  • ‘சாய்ராம் சாய்ராம்’ என உன் நாமம் சொல்லி
  • ஜெபமணி மாலைகளுருட்டி மனனம் செய்ய
  • உடல் உள்ள மனக் கவசமாய்
  • ‘சாயி காயத்திரி’ சங்கல்பமாய்க் கொலுவிருக்க
  • கவிதைகள் புனைந்து பன் மொழிகளிலும்
  • உன்னைப் புகழ்ந்து பாடி ஆனந்தம் கொள்ள
  • உன் பஜன் பாடல்கள் செவிகளில் தேனாயினிக்க
  • ஈடில்லா உன் அருளால் பற்பல சேவைப்பணிகள்
  • செய்தெங்கள் பிறவிப்பிணி நீங்கிட
  • உன் சாந்நித்தியம் துணையிருக்க
  • பல்வகை வாசனைச் சுகந்த கதம்ப மலர்களால்
  • பூச்சூட்டி உன்னை அழகுபடுத்தி கண்கள்
  • ரசித்து மனம் மகிழ
  • பல்வண்ண உதிரிப்பூக்களால் ‘அஷ்டோத்திரம்’
  • ‘சகஸ்ரநாமம்’ அர்ச்சித்துப் பூசனைகள் செய்திட
  • பன்மத இன மொழிப் பக்தர்களுக்கும் புகலிடமாம்
  • பிரசாந்தித் தலப்பர்த்திப் பயணம் யாத்திரையாய் வர
  • எங்களை நினைத்து அழைக்க நீ இருக்கக்
  • குறையொன்றுமில்லை ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே
  • சரணம் சரணம் போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0