எந்திர வாழ்விலுன் அவதாரம்
- சந்திரவதன தரிசனமே உன் மந்திரவதனம்
- இந்திரலோகமாம் இன்பம் பர்த்திப்பபயணம்
- மந்தகாசப் புன்னகை முகனே நீ சர்வம், சகலம்
- என்றும் சுந்தர பஜனைப் பாடல்களே உன் பஜனம்
- எந்திரவாழ்வியலிலுன் னவதாரம் வந்ததும்
- சுந்தரத்தெலுங்கினில் நீ உரைத்ததும்
- இந்திய மண்ணிலுன் சனாதன தர்மம்
- சத்சங்கமமாய் வியாபித்து விளைந்ததும்
- சாயி உன் சங்கல்பமின்றி வேறேது ?
- கீதைப்பாதை தந்த ராதையின் கண்ணனே சாயி கிருஷ்ணா
- வள்ளி தெய்வானை தேவசேனா பதியேமும் மூர்த்திகள்
- சமேதரே தத்தாத்ரேயரே ஆதி சிவசக்தி
- ஸ்வரூபப் பரப்பிரும்மமே
- உனக்கு ஆத்மார்த்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: