கோவிந்தா என்றழைக்க

  • கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா
  • கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய்
  • கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம்
  • கேட்கத்தான் செய்திடுவாய்
  • மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி
  • பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய்
  • மாதவம் நாங்கள் செய்ததால்தான்
  • நீ அவதரித்தாயென அகிலம் உணர வைப்பாய்
  • முகுந்தா யாதவா ஸ்ரீஹரி கோவர்த்தன கிரிதாரி என
  • ஆயிரம் ஆயிரம் நாமங்களில் அழகழகாய்
  • உயிர்களுக்குன் அன்புக்கருணை
  • மழை பொழிகின்றாய்
  • சாயி கிருஷ்ணா உன் திருவடித் தாமரை தொழுதிடவுடம்
  • உன் சங்கல்பம்தான் வேண்டுமே
  • வெண்ணையிலும் வெண்மை மென்மையான
  • உந்தனைப் பணிந்தே உன்பக்திச் சேவைகள் செய்திட
  • பன்மதப் பக்தர்கூடும் புனிதப்
  • பிரசாந்தித்தலத் தெய்வமே
  • பர்த்திவாச ஸ்ரீ சத்யசாயி பரப்பிரம்மமே
  • உனக்கு ஆனந்த ஆத்மார்த்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0