கண்ணப்ப நாயனார்

பொத்தப்பி நாட்டில், உடுப்பூரில் அவதரித்த வேடர்குலத்தைச் சேர்ந்த திண்ணன் காளத்திமலை காளத்திநாதன் மீது பக்தி கொண்டு பூஜை செய்யும் முறை அறியாது லிங்கத்தின் மீதுள்ள வாடிய பூக்களை காலால் அகற்றி, வாயில் உள்ள நீரினால் அபிஷேகம் செய்து இறைச்சியைப் படைத்து தினமும் வழிபட்டு வந்தான்.

அவனது பக்தியை உலகுக்குணர்த்த எண்ணிய காளத்திநாதர் (சிவபெருமான்) ஒரு நாள் திண்ணன் வரும் போது சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இரத்தம் வடியச் செய்தார். துயரம் கொண்ட திண்ணன் பச்சிலை மூலிகைகள் மூலம் இரத்தத்தை நிறுத்த முடியாமல் போகவே, தன் கண்ணினைப் பெயர்த்து லிங்கத்தின் கண்களில் அப்பினான். அக்கண்ணில் இரத்தம் நின்று, மறு கண்ணில் இரத்தம் வர, திண்ணன் அந்தக் கண்ணில் காலை ஊன்றி மறு கண்ணையும் பெயர்க்க முயன்ற போது, பரமன் ‘நில்லு கண்ணப்பா! நில்லு கண்ணப்பா!’ என்று கூறி, அவருக்கு காட்சி கொடுத்து, அருள் புரிந்தார். கண்களைத் தியாகம் செய்ததால் திண்ணன் அன்று முதல் கண்ணப்ப நாயனாராகப் போற்றப்பட்டார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0