கர்மவினை

ஒரு மனிதன் தான் ஆற்றும் செயல்களில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. தான் எங்கிருந்தாலும், நல்ல செயல்களை மட்டுமே ஆற்றுவதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காட்டுக்கு தப்பி ஓடுவதால் சூழ்நிலைகளில் மட்டுமே திருப்பம் ஏற்படுமே இன்றி எந்த தீர்வும் கிடைக்காது. சுவாமி 24 அக்டோபர் 1963 அன்று ஆற்றிய சொற்பொழிவில் இச்செய்தியை நிலைநாட்டுவதற்காக, ஒரு வேடிக்கையான கதையை விவரித்தார்.

ஆன்மீகத்தை நாடி செல்லும் ஒருவனுக்கு, அதை தொடங்கி வைக்கும் வண்ணமாக யோகி ஒருவர் ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அவன் அம்மந்திரத்தை இடையூறில்லாமல் தியானிக்க விரும்பினான் . ஆனால் அவனுடைய வீட்டில் கவன சிதறல்கள் ஏற்பட்ட காரணத்தால், காட்டுக்கு சென்று ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானிக்க முடிவு செய்தான்.

மிக விரைவிலேயே , மரக் கிளைகளில் கூடு கட்டி வசிக்கும் பறவைகள் இரைச்சலிட ஆரம்பித்தன, அவைகளது வெளியேற்றத்தை அவனது தலையில் துளிகளாய் பொழிந்தன. அவன் கோபமடைந்து . ” நான் கடவுளுடன் கூடி பேசுவதற்கேற்ற இடமொன்று கிடைக்காதா” என்று கதறினான். ” வீட்டில் குழந்தைகள்; காட்டில் பறவைகள் மற்றும் வெளவால்கள் ! நான் தீக்குளித்து, இதைவிட மேம்பட்ட சூழலில் மீண்டும் புதிதாக பிறந்து என் சாதனையை ஆரம்பிப்பேன் ” என்று முடிவு செய்தான்.

ஆகவே அவன் எரிபொருள்களை சேகரித்து சிதை ஒன்றை உருவாக்கினான். அச்சிதையில் இறங்கும் சரியான நேரத்தில், ஒரு வயதானவர் குறுக்கிட்டு, ” நீங்கள் எப்படி வேண்டுமானாலும், உங்கள் முடிவை நிறைவேற்றுங்கள். ஆனால், இப்போது காற்றின் வீச்சு இங்கிருந்து நாங்கள் வாழும் குடிசைகளை நோக்கி வீசுகிறது. ஆகவே, தயவுசெய்து காற்றின் திசை மாறும் வரை காத்திருங்கள், ஏனென்றால், மனித உடல் எரியும் வாசனை எங்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படி உங்களுக்கு அவசரமாக இருந்தால், வேரிடத்த்திற்கு மாறி சென்று இந்த ஏழை மக்களுக்கு தொந்தரவாக இருப்பதை தவிர்க்கலாம். ” என்றார்.

இறப்பதற்கு கூட தனக்கு சுதந்திரம் இல்லை என்பதை சாதகன் உணர்ந்தான். ஆகையால், அவன் வீடு திரும்பி, அங்கேயே எல்லாவற்றையும் தைரியத்துடன் கடைபிடிக்க முடிவு செய்தான்
ஒருவன் இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே தான் தன் செயல்கள் அனைத்தையும் ஆற்ற வேண்டுமே தவிர அதை தன் முன்கோபத்தால் அசைக்க நினைத்தால் எந்த பயனும் கிட்டாது.

அ-சாந்தி — உலகின் குழப்பம் மற்றும் துன்பங்களிலிருந்து— ஒருவர் நல்லிணக்கத்தையும் அமைதியையும் தேர்ந்தேடுத்து பறிக்க வேண்டும்.

ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 3, அத்தியாயம் 31, 24/10/1963.b

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0