குழலோசையில்

  • மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது
  • உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது
  • வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும்
  • நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும்
  • ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும்
  • ஆவினங்கள் அமுதத்தினை அழகுடன்தான் சொரியும்
  • மா மழையும் மகிழ்வுடனே சாரல் மழை பொழியும்
  • பூந்தோட்ட நந்தவனம் புதுப்புது மலர்கள் பூத்தே
  • சுகந்தமாய் நறுமணங்கள் மணக்கும்
  • யமுனையின் தீரம் எல்லாம் கண்ணன் பாதம் பதியும்
  • கோவர்த்தன கிரியெல்லாம் மாயவன் வேதம் பதியும்
  • முகம் மலர்ந்து நீயும் புன்னகையுடன் புதுமலராய் வருவாய்
  • முன்னுரையாய் முகமன் கூறி
  • உன் பதமலர் தொழ வரம் தருவாய்
  • காளிங்க நர்த்தனத்தின் பொருள் உலகில் புரியும் – உன்
  • கானக்குழலிசையும் வானம் பூமி வரை பரவும்
  • பாரிஜாதப் பக்தர் கூட்டம் பாரெல்லாம் குவியும்
  • சாயி கிருஷ்ணன் நாமஸ்மரணை நாள்தோறும் ஒலிக்கும்
  • பாபா உன் அருட் கருணை மழையும்,
  • அன்பு மனதில் பொழியும், ஆனந்தக் கண்ணீர் வழியும்
  • சாயி கண்ணன் நாமஜெயம் நாள்தோறும் பெருகும்
  • ஆநிரைகள் ஆனந்தமாய்க் கன்றுகளுக்குப் பால் பொழியும்
  • அகம் நிறைந்து அகிலமெல்லாம் ஆனந்த நடனமாடும் – உன்
  • முகம் மலர்ந்தெங்கள் அகமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0