சிறந்தவை மூன்று

தன்னைக் காணவரும் அனைவரிடமும் மன்னன் ஒருவன் மூன்று வினாத் தொடுப்பது வழக்கம். (1) மனிதர்களில் சிறந்தவர் யார்? (2) காலத்தில் சிறந்தது எது? (3) செயல்களில் சிறந்தது எது? மேற்படி வினாக்களுக்குரிய விடைகளைப் பெறுவதில் மிகவும் ஆவல் உடையவனாக இருந்தான் மன்னன். ஒரு நாள் அவன் வனத்துக்குள் சென்று மலையிலும் சமவெளிகளிலும் உலாவிக் கொண்டிருந்தான்.

அங்கே ஆஸ்ரமம் ஒன்று இருப்பது கண்டு சற்று நேரம் அதில் ஓய்வெடுக்க விரும்பினான். அரசன் ஆஸ்ரமத்தை அடைந்தபோது, சாது ஒருவர் செடி கொடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அரசன் களைப்புடன் இருப்பதைக் கண்ட சாது, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டு, அரசனுக்கு சில கனிகளும், நீரும் கொடுக்கும் பொருட்டு ஓடி வந்தார்.

அப்போது உடல் முழுவதும் புண்பட்ட ஒருவனை மற்றொரு சாது கொண்டு வந்தார். இதைப் பார்த்தவுடன் இந்த  சாது புண்பட்டவனிடம் சென்று, புண்களை நன்றாகத் துடைத்து, மூலிகை மருந்தைத் தடவினார். துன்புறுபவனின் மனம் ஆறுதல் அடையும் வகையில் இன்சொற்களையும் கூறினார். மன்னன் தனது நன்றியைக் கூறிவிட்டுப்  புறப்பட விரும்பினான்.

சாது  மன்னனை ஆசிர்வதித்தார் ; இருப்பினும் இன்னும்  அந்த மூன்று வினாக்களுக்குரிய விடை கிட்டாததால் மன்னன் மனம் நிம்மதி அடையவில்லை; சாதுவிடம் அந்த விடை ஒரு வேளை கிட்டக்கூடும் என மன்னன் எண்ணினான்.

இதுவரை ஆசிரமத்தில் மன்னன் பார்த்துக்கொண்டிருந்த செயல்களே அவ்வினாக்களுக்கூரிய விடையும், சாட்சியும் ஆகும்” என்றார் சாது. அதாவது, தனது கடமையை விட்டுவிட்டு, மன்னனுக்குக் கனியும், நீரும் கொடுத்தது, விருந்தினரை முதலில் கவனிக்க வேண்டும் என்ற  சம்பிரதாயத்தை ஒட்டியது; “மன்னனுக்குப் பரிமாறும் பணியை நிறுத்தி விட்டு, மற்றொருவனைக் கவனிக்க சென்றது, புண்பட்டவனுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையை ஓட்டியது. இப்படியாகத்தன்னை நாடி வந்தவர்களுக்குச் சேவை செய்பவன் சிறந்த மனிதனாகிறான். துயர் உற்றவர்களுக்கு உச்சக் கட்ட ஆறுதல் அளிப்பது செயல்களில் சிறந்ததாகிறது. சேவைக்குரிய காலம் நிகழ் காலமாதலால் நிகழ்காலமே சிறந்த காலாமகிறது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0